சிறப்புப்பகுதி

நாங்க எவ்வளவோ தேவலாம்!

Staff Writer

சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்களைப் பற்றி கருத்துகளை தெரிவித்தார். பாகிஸ்தான் - இந்தியா விவகாரத்தில் அவர்கள் விரும்பினால் நடுவராக இருப்பேன் என்றது சிஏஏ விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றது என பல விஷயங்களில் எச்சரிக்கையுடன் பேசினார். இருப்பினும் ஊடகங்களுடனான அவரது கடும்போக்கு இங்கும் தொடர்ந்தது. ஜிம் அகோஸ்டா என்கிற சிஎன்என் தொலைக்காட்சி நிருபரை வெள்ளை மாளிகையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு அவமதித்திருந்தார் ட்ரம்ப். அத்துடன் அந்த நிருபருக்கான வெள்ளை மாளிகை பாஸும் பிடுங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது பற்றி ஜிம் அகோஸ்டா ஒரு புத்தகமே எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல, செய்தியாளர்களை சமூக ஊடகத்தில் நேரடியாக குற்றம் சுமத்துவது அடிக்கடி ட்ரம்ப் செய்துவரும் வேலை.

 டெல்லியில் சி.என்.என். நிருபர் ஒரு கேள்வியை முன் வைத்தபோது, ‘’தவறான செய்தியை சி.என்.என் வெளியிடுகிறது’ என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஆனால் சி.என்.என். நிருபர் சும்மா இருக்கவில்லை. பதிலுக்கு “ட்ரம்ப், உண்மை சொல்வதில் எங்களுடைய போக்கு, உங்களை விட எவ்வளவோ பரவாயில்லை” என்று போட்டுத் தாக்கினார்.

“நான் சொல்றேன்.... உங்க போக்குதான் ரொம்ப மோசம். நீங்க அதை நினைச்சு வெட்கப்படணும்” என்று சொன்ன ட்ரம்பிடம்,” நானும் எதற்கும் வெட்கப்படவேண்டியதில்லை.. என் நிறுவனமும் தலைகுனியவேண்டிய அவசியமில்லை” என அந்த நிருபர் இடைமறித்தார்.

ஆனாலும், “ஒளிபரப்பு உலகில் உங்கள் போக்கு மிகமிக மோசமானது” என்று ட்ரம்ப் சொல்லிக்கொண்டே போனார்.

யார்யா இப்படி பேசியது என்று பார்த்தால்... ஜிம் அகோஸ்டா. 2018-ல் யாருடைய பாஸை ட்ரம்ப் பிடுங்கச் சொன்னாரோ அவர்தான்!

ஓர் அதிபர் என்றும் பாராமல்...