மோனாகாசி
சிறப்புப்பகுதி

தூரிகை            

மோனாகாசி

மோனாகாசி என்கிற புனைப்பெயரில் ஓவியம் வரைந்து வரும் காசி விஸ்வநாதன் சேலத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தனது பாதை இனி ஓவியம்தான் என கண்டந்துவிட்ட மோனாகாசி, அரசு பள்ளியில் 33 ஆண்டுகள் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுப்பெற்றிருக்கிறார். சமச்சீர் கல்வி அறிவியல் பாட புத்தகத்தில் வரும் படங்கள் இவர் வரைந்தவைதான். ஓவியம் மட்டுமின்றி புகைப்பட கலை வாயிலாக பறவைகளை ஆவணப்படுத்தும் பணிகளிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளின் உருவம் மோனாகாசியின் ஓவியத்தால் உயிர் பெற்றிருக்கிறது.

ஜனவரி, 2021