சிறப்புப்பகுதி

உருளை விவசாயிகள் மீது வழக்கு போட்ட பெப்சி!

ஆதி

குஜராத்தில்  உருளைக்கிழங்கு விவசாயிகள் சிலர் மீது ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு அமெரிக்க நிறுவனமான பெப்சிகோ வழங்கு போட்டிருப்பதுதான் தேர்தல் பரபரப்பைத் தாண்டி பெரிய செய்தி ஆகி உள்ளது.

பெப்சிகோ லேய்ஸ் என்ற உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் பிராண்டுக்காக  ஒரு குறிப்பிட்ட ரக உருளைக்கிழங்கு வகையை உருவாக்கி வைத்துள்ளது. இதை தன்னிடம் ஒப்பந்தம் செய்துள்ள விவசாயிகளுக்கு அளித்து அவர்கள் பயிரிட்டு தன்னிடமே விற்கவேண்டும். இந்த நான்கு பேரும் பெப்சியுடன் ஒப்பந்தம் இல்லாமலேயே இந்த ரக உருளைக் கிழங்கை பயிர் செய்துவிட்டனர் என்பது பெப்சியின் குற்றச்சாட்டு.

நாங்கள் எப்போதும் போடும் உருளைதான் இது. பெப்சி சொல்லும் எதுவும் எங்களுக்குத் தெரியாது என்பது
 விவசாயிகள் சொல்லும் கருத்து.

இந்த  நான்கு விவசாயிகளும்கூட  எங்களிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள முன் வந்தால் நாங்கள் சமாதானமாகப் போக தயார் என்கிறது பெப்சி.

இந்த நிறுவனம் உருவாக்கிய ரகத்தை எதற்கு மற்றவர்களுக்குத் தரும்? அதன் மீது உரிமத்தை பதிவு செய்ததால் அதற்குத்தான் உரிமை உண்டு என்கிறார்கள் சிலர்.

 விவசாய சங்கங்களோ இது தவறு, விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் லேய்ஸ் உருளை சிப்ஸை நாம் புறக்கணிப்போம் என்கின்றனர்.

லேய்ஸ் பாக்கெட்டை சாப்பிடும்போது இது பற்றி
யோசித்து அப்புறம் சாப்பிடுவோம்.