சிறப்புப்பகுதி

இணையத்தில் பள்ளிப் பாடம்!

Staff Writer

தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் ஏராளமான வரவேற்புக்குரிய விஷயங்களில் மாணவர்களுக்கான பாடங்களை சிறப்பாக பாடங்களை எடுக்கக்கூடிய ஆசிரியர்களை எடுக்க வைத்து அதை யூட்யூபில் ஏற்றியிருக்கும் விஷயம் மிகுந்த பாராட்டுக்குரியது. பல்வேறு வகுப்புகளுக்கான கணிதம், ஆங்கிலம், வேதியியல் போன்ற பாடங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் எடுக்கிறார்கள். TNSCERT  என்ற  யூட்யூப் சானலில் இதைக் காணலாம்.

உலகளாவிய பல்கலைக்கழங்கள் தரும் Mooc என்கிற இணையக்கல்விக்கு இணையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.  தரமான ஆசிரியர் இல்லை, வகுப்பறை மோசம் போன்ற குறைகளை இனி சொல்ல வேண்டியதில்லை! ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பாடங்கள் மட்டுமல்லாமல் வேறு வகுப்புகளுக்குமான பாடங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதை மேலும் விரிவாக்கும்போது தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்! டியூஷன் படிக்க அலைய வேண்டாம்!

செப்டெம்பர், 2018.