சிறப்புக்கட்டுரைகள்

சரித்.சி.வர்மா

Staff Writer

என் புகைப்படங்களில் தங்களை அழகாகக் காண்பவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னுள் இருக்கும் புகைப்படக் கலைஞனுக்கு ஆகச்சிறந்த திருப்தியைத் தருகிறது” என்கிற சரித் சி வர்மா, கேரளத்தைச் சேர்ந்த புகைப்பட கலைஞர். பிரபலங்களைப் புகைப்படம் எடுத்து புகழ்பெற்றிருப்பவர். “ எந்த மாதிரியான படங்களைத் தரவேண்டும் என்பதற்கான புரிதல் புகைப்பட கலைஞரிடம் இருக்கவேண்டும். பிரபலங்கள் புகைப்படங்களில் புத்துணர்ச்சியுடன் தோன்றவும் செய்யவேண்டும்.“ என்கிற வர்மா ஓவியக்கல்லூரியில் படித்தவர். ஒளியின் விளையாட்டு தன்னை சிறுவயதில் இருந்தே ஈர்த்ததாகச் சொல்லும் இவர் பெங்களூருவில் ஒரு நண்பருக்காக எடுத்தமுதல் புகைப்படங்கள்தான் பேஷன் துறையில் இவருக்கு பெயரை ஈட்டித்தந்ததாகக் கூறுகிறார்.

“ ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கையிலும் அது ஒரு நாடகத்தை இயக்குவது போல் இருக்கும். நான் தான் இயக்குநர். மற்றவர்கள் நடிகர்கள். நல்ல குழு அமைவது அவசியம். மேக் அப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட், வார்ட்ரோப் ஸ்டைலிஸ்ட், இரண்டு உதவியாளர்கள் அடங்கியது இந்த குழு.

எப்படியும் சிறந்த கோணங்களில் பிரபலங்களைக் காட்டுவேன் என்று என்மேல் அவர்களுக்கு அபார நம்பிக்கை உண்டு. அதில் எனக்குப் பெருமையே. புதிய காமிரா வாங்கியதும் எதை முதலில் படம் எடுப்பது என்று குழப்பம் ஏற்படும். எனக்கு திருவனந்தபுரம் மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவைப் படம் எடுக்கத் தோன்றியது. அவர் புகைப்படக் கலையைப் பற்றி நிறையத் தெரிந்தவர் என்பது முதல் சந்திப்பிலேயே தெரிந்துவிட்டது. அவரைப் படம் எடுக்க ஆரம்பிக்கும்போது என் கைகள் நடுங்கின. சமாளித்து எடுத்தேன். ஷூட் முடிந்ததும் என் அருகே வந்து காமிராவை வாங்கிப் பார்த்தார். அந்த காட்சியை என் மனதில் போட்டோ பிரேம் ஆக்கி மாட்டிக் கொண்டேன்” சொல்கிறார் சரித் சி வர்மா.  அவரது சில் படங்கள் இங்கே

ஜூன், 2014.