இளைஞர்கள் சிறப்பிதழாக மலர்ந்திருந்த கடந்தமாத அந்திமழை இதழில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு பலர் வாழ்த்துச் சொன்னார்கள். இதற்கிடையில் சில நக்கல்கள், இடித்துரைப்புகளும் இல்லாமல் இல்லை. ‘ஆசான்’ ஜெயமோகனின் வசையும் அதில் ஒன்று. சமூக ஊடகங்கள் சிலநாட்கள் கொந்தளித்தன.
அந்திமழையின் அமைப்பு இந்தியா டுடே போல. ஆனால் இந்தியா டுடேயில் ஒருவகை ஊடகத்திறன் இருந்தது. ஆசிரியர்குழு என ஒன்றிருந்தது. இதில் அப்படி ஏதும் இருப்பது போலத் தெரியவில்லை. இவ்விதழ் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் இளைஞர் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஒரே நோக்கம் நாலைந்து இளைஞர்களையாவது வாசிக்க வைப்பது. இந்தியா டுடே செய்ததுதான், ஆனால் அவர்களுக்கு ஓர் ஆசிரியர் கொள்கை இருந்தது. இவர்களுக்கு அப்படி ஏதுமில்லை. ஆசிரியர் குழுவிலோ அல்லது அலுவலகத்திலோ எவருக்கேனும் தெரிந்தவராக இருந்தால்போதும் போலிருக்கிறது. அந்திமழை ஆரம்பத்தில் நான் ஓரிரு கட்டுரைகள் எழுதிய இதழ். இதழ்களில் வணிகதந்திரங்கள் கொண்டவை உண்டு. மொண்ணையானவைகூட உண்டு. தமிழில் பிரபல இதழாக இருக்க வேறுவழியில்லை. ஆனால் அந்திமழை போல கேனத்தனமான ஒரு இதழ் இதுவரை வந்ததில்லை என நினைக்கிறேன். மேற்கொண்டு வாசிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன். எதற்கு ரத்தக்கொதிப்பு.
-ஜெயமோகன் தன் இணையதளத்தில்-
****
aranga @arangasamy: இதழ் துவங்கியபோது எழுதி ஆதரித்தார், கீழிறங்கும்போது சுட்டுகிறார். அந்திமழை தரம் உயரலாம் இனி.
மணிமொழி @mpmani128: எந்த கடைகளில் போய் கேட்டாலும், அந்திமழை புத்தகம் வித்துடுச்சுனு சொல்றாங்க.
சௌம்யா @arattaigirl :அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது #ஜெமோ:-).
Haran Prasanna முகநூலில்:
அந்திமழை இதழை நான் ஓரளவு தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அதன் வகைப்பாட்டில் அது நல்ல முயற்சியே. நிச்சயம் புறந்தள்ளக்கூடிய மோசமான இதழ் அல்ல. அது ஏன் காலச்சுவடு போல இல்லை, அது ஏன் சிற்றிதழ் போல இல்லை என்பதெல்லாம் நேரம்கொல்லும் ஆய்வேயன்றி அதில் ஒரு பொருளும் இல்லை. இடைநிலை எழுத்தாளர்கள் பெருகி வரவேண்டும் என்பதற்கு இணையானதுதான் அந்திமழைகளின் இருப்பு. அந்திமழைகளுக்கு என் ஆதரவு.
Hareesh@hareeshtweets: அந்திமழை ஆரம்பத்தில் நான் ஓரிரு கட்டுரைகள் எழுதிய இதழ் - ஜெமோ # அப்புறம் என்ன இதுக்கு நீரு எழுதுனீரு?
வெ.பெத்துசாமி@Pethusamy : ‘அந்திமழை‘, தான் இலக்கிய இதழ் என்று அறிவித்துக் கொள்ளவில்லையே, அப்புறம் ஏன் ஆசானுக்கு இத்தனைக் கோபம்?
மதுரக்காரன் ©O+ve @jeganjeeva:
மிஸ்டர்.அந்திமழை ஜெமோட்டயும் ஒரு பேட்டி எடுத்துப் போடுங்களேன். :-)
ராமலிங்கம் சொக்கலிங்கம்- முக நூலில்: இந்தியா டுடே மாதிரியான தேசிய ஊடகத்துடன் அந்திமழை மாதிரியான நாலைந்து வருட பத்திரிக்கையை ஒப்பிட்டு நோக்குவதே அந்திமழையின் வெற்றிதானே.
Balaji Manoharan@vettipaiyal ://ஆனால் அந்திமழை போல கேனத்தனமான ஒரு இதழ் இதுவரை வந்ததில்லை என நினைக்கிறேன்// அடுத்த ஆறு மாசத்துக்கு இது போதும் :-)
பெருவளம் தம்பிம் @_thambi: தகுதியில்லாத ஆள் என்பதே அதீத உள் அரசியல் கொண்டது.தகுதியை வரையறுக்க ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அளவுகோல் உண்டு.. #அந்திமழை
உளவாளி @withkaran: டேய் அந்திமழை..நானும் ஒரு நாள் பெரிய பிரபலமாகி சிஎன்என் பபிசின்னு பேட்டி கொடுக்கல என் பேரு நந்து இல்ல..
Mr.வண்டு@ @Mr.Vandu: ஹலோ அந்திமழை ஓனருங்களா? எங்களயெல்லாம் எப்ப பேட்டி எடுத்து அடுத்த நம்பிக்கை நட்சத்திர ஒளிகீற்றா மாத்த போறீங்க.
அக்டோபர், 2015.