சிறப்புக்கட்டுரைகள்

உங்களுக்கு நான் இருக்கிறேன்!

இரா. கௌதமன்

இன்றைக்கு இருக்கும் ஆக்ரோஷமான, யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி ஓரிரவில் தயார்படுத்தப்பட்டது அல்ல.

 ஜெண்டில்மேன் விளையாட்டை நம்மவர்களும் ஜெண்டிலாகவே விளையாடி வந்தார்கள். கூடவே 2000 ல் வெடித்த மேட்ச் பிக்சிங் விவகாரமும் சேர்ந்துகொள்ள படு பாதாளத்தில் விழுந்துகிடந்த இந்திய அணியை வழி நடத்த பொறுப்பேற்கிறார் கொல்கத்தா பிரின்ஸ் கங்குலி. இன்றைய தோனி – கோலி அதிரடி வெற்றி அணிக்கு முதல் விதை நடப்பட்டது கங்குலி கைகளால். ஆச்சாரமான கொல்கத்தா நடுத்தர வர்க்க, கூச்ச சுபாவம் கொண்ட பதினேழு வயது பையன் இந்திய கிரிக்கெட் உலகில் நுழைந்தது முதல் கடைசி ஐபிஎல் விளையாடியது வரையிலான ரோலர் கோஸ்டர் அனுபவங்களை மிக சுவராஸ்யமான நடையில் ‘ அ இஞுணtதணூதூ டிண் ணணிt ஞுணணிதஞ்ட ‘ புத்தகத்தில் விவரித்துள்ளார் கங்குலி. அவரே சொல்வது போல் ஒரு நாள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வருவதும், அடுத்த நாள் பிளாட்பாரத்தில் உறங்குவதும் போன்று ஏகப்பட்ட மேடு பள்ளங்களைக் கொண்ட அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் எதிர் கொண்ட விதம் எவரும் நம்ப முடியாத அளவிற்கு தன்னம்பிக்கை அளிக்கக் கூடியது.

« « «

கங்குலி எழுதிய புத்தகத்தில் கிரேக் சேப்பலின் பெயர் இல்லாவிட்டால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். இரண்டு பேருக்குமான பிரச்னை ஊரறிந்தது. அதைப்பற்றி கங்குலி மிக விரிவாகவே எழுதியுள்ளார். வெளி நாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி பிரகாசிக்காததற்கான காரணம் அங்குள்ள ஆடு களங்களுக்கு ஏற்றவாறு நம்மை தயார் படுத்திக் கொள்வதற்குள் டூர் முடிந்து விடுகிறது என்பதை உணர்ந்த கங்குலி 2003 ல் டூருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவிற்க்கு ரகசிய விசிட் அடிக்கிறார். மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அங்கு கங்குலிக்கு அனைத்து வகையிலும் உதவுபவர் கிரேக் சாப்பல். அங்குள்ள ஆடுகளங்கள், பீல்டிங் அமைப்பு, எந்த முறையில் பந்து வரும் என்று மிக விரிவாகவே சாப்பலுடன் அலசி ஆராய்ந்து ஆஸ்திரேலியாவை இந்த முறை சொந்த மண்ணில் தெறிக்க விடுவது என்ற முடிவோடு இந்தியா திரும்புகிறார். சாப்பலின் கிரிக்கெட் அறிவு மிக விலாசமானது என்று இன்றும் சொல்கிறார். கங்குலியின் முன்னேற்பாட்டினால் ஸ்டீவ் வாக்கின் டீமை வெற்றி கொள்கிறது இந்திய அணி.

இதற்கடுத்து இந்திய அணியின் கோச்சாக இருந்த ஜான் ரைட்டின் பதவிக் காலம் முடிந்தவுடன் அடுத்த கோச் யார் என்ற கேள்விக்கு கங்குலியின் உடனடி சாய்ஸ் கிரேக் சாப்பல். ஆனால் கவாஸ்கர் எச்சரிக்கிறார். டால்மியாவும், ‘ கிரேக் சாப்பலின் சகோதரர் இயன் சேப்பல் இது சரியான தேர்வு அல்ல, மறு பரிசீலனை செய்யுங்கள்' என்று சொன்னதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கிரேக் சாப்பல் தான் வேண்டும் என்று உறுதியாக நின்று 2005 ல் அவரை கோச் ஆக்குகிறார். கிரேக் வந்த முதல் வருடத்திலேயே காரணமேயில்லாமல் கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, அணியிலிருந்தும் நீக்கப்படுகிறார். சொந்த காசில் சூனியம் வைத்த கதை தான். அவருக்கு ஏன் கங்குலியைப் பிடிக்கவில்லை என்றும் தெரியவில்லை. ஆனால் இங்குதான் கங்குலிக்குள்ளிருக்கும் போராளி வெளி வருகிறார். அணியில் மீண்டும் இடம் பிடித்துக் காட்டுகிறேன் என்று உறுதி பூண்டு அனைத்து உள் நாட்டு போட்டிகளிலும் பங்கேற்கிறார். கூடவே உடல் தகுதி, பேட்டிங்கில் உள்ள சின்ன சின்ன குறைகளுக்குப் பயிற்ச்சி. மிகுந்த கடினமான இந்த நாட்களில் ‘ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய், ஓய்வை அறித்துவிடலாமே' என்பது அப்பாவின் அட்வைஸ். ஆனால் அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்துவிட மனமில்லை. மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டுத்தான் ஓய்வு என்று முடிவெடுக்கிறார்.

கங்குலி

அதே சமயத்தில் இந்திய அணி டிராவிட்டின் தலைமையில் தடுமாறுகிறது. மறு பக்கம் கங்குலி உள் நாட்டு போட்டிகளில் வரிசையாக பிரகாசிக்கிறார். வேறு வழியே இல்லாமல் கங்குலி மீண்டும் இந்திய அணிக்குள். ஆனால் இந்த வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படும் என்பதை உணர்ந்தே இருக்கிறார் கங்குலி. ஒவ்வொரு ஆட்டத்தையும் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸிலும் வாகை சூடுகிறார்.

17 வயதில் இங்கிலாந்து டூருக்காக முதன் முதலில் தேர்ந்தெடுப்படும் கங்குலிக்கு தொடரில் ஒரே ஒரு வாய்ப்புதான் தரப்படுகிறது. திரும்பவும் நான்காண்டுகள் கழித்துதான் இந்திய அணிக்கு திரும்புகிறார். முதல் முறை போலில்லாமல் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதம் கங்குலியின் வருகையை உலகிற்க்கு அறிவித்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பாக கொல்கத்தாவிலிருந்து பெரிய அறிமுகம் இல்லாமல் கிளம்பிய கங்குலி நாடு திரும்பும் போது மொத்த கொல்கத்தாவும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. ஒவ்வொரு பெங்காலியும் அவர்களே ஜெயித்தது போன்று கொண்டாடித் தீர்க்கிறார்கள். முதலமைச்சர் ஜோதி பாசு தொலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கிறார். வங்கத்திற்கு புதிய இளவரசன் கிடைத்து விட்டார்.

« « «

கங்குலி

புத்தகத்தின் நெகிழ்சியான பகுதி கங்குலிக்கு பாகிஸ்தானில் ஏற்படும் அனுபவங்கள். கங்குலி தலைமையில் பாகிஸ்தானில் முதன் முறையாக தொடரை வெல்கிறது இந்தியா. ஆனால் இந்தியா பாகிஸ்தான் உறவிலுள்ள சிக்கல்கள் காரணமாக கடுமையான பாதுகாப்பு வளையத்தின் நடுவே தான் அத்தனை போட்டியும். காவல்பிண்டியிலுள்ள உணவகங்கள் உலக பிரசித்தமானது. செக்யூரிட்டி கெடுபிடிகளைத் தாண்டி ரகசியமான நண்பர்களுடன் இரவு உணவிற்கு வெளியே கிளம்பி விடுகிறார். மிக நெரிசலான அந்த பகுதியில் எளிதாக அடையாளம் காணப்பட்டாலும் வேறு யாரோ மாதிரி நடிக்கிறார் கங்குலி. ‘ நீங்க கங்குலிதானே' என்று கேட்கும் உணவக உரிமையாளரிடம் குரலை மாற்றி இல்லையே என்று சமாளிக்கிறார். சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கங்குலி, கங்குலி என்று அழைக்கும் குரல். அழைத்தது ராஜ் தீப். அங்கே பத்திரிகையாளர் ராஜ் தீப் சர் தேசாய், அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன் உணவருந்திக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். கும்பல் ஆரவாரத்துடன் மொய்க்கத் தொடங்குகிறது. அவரசரமாக கை கழுவி பணம் தரப் போனால் கடைக்காரர் ' உங்க கிட்ட காசு வாங்கலாமா? உங்கள மாதிரி ஆக்ரோஷமான கேப்டன் எங்களுக்கும் வேணும்னு ஆசைப்படறோம்' என்கிறார். நண்பர்களுடன் காரில் பரபரவென ஹோட்டலை நோக்கி பறக்கையில் பைக் ஒன்று சீறிக் கொண்டு துரத்துகிறது. பைக்காரர் கண்ணாடியை இறக்கச் சொல்லி சைகை காட்டுகிறார். நண்பர்களுக்கு வெடிகுண்டு பயம். கங்குலி பிடிவாதமாக கண்ணாடியை இறக்க ,' உங்களோட மிகப்பெரிய பேன் நான். பாகிஸ்தானுக்கு உங்கள மாதிரி கேப்டன் வேணும்' என்று அவரும் ஆட்டோகிராப் கேட்கிறார். அக்ரம், அக்தர், வக்கார் என்று விருந்தோம்பலில் திளைக்கிறார் சவுரவ். இந்தியாவின் வெற்றியை மகிழ்ச்சியோடு பாகிஸ்தான் கொண்டாடுகிறது. இதற்கு முன்பு பாகிஸ்தான் வரும் போது மனைவிக்கு சல்வார் வாங்குகையில் அங்கும் பணம் வாங்க மறுத்து 'உங்களுக்கு எங்களின் அன்பு பரிசு' என்கிறார்கள். மொத்த பாகிஸ்தான் அத்தியாயமும் உணர்த்துவது ஒன்றைத் தான், இன்றும் நாம் சகோதரர்களே…அரசியல் களங்கள் தான் நம்மை பிரிக்கின்றன.

« « «

சவுரவின் கேப்டன் காலத்தில் தான் இந்தியா வெளி நாடுகளில் அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறது. யுவராஜ், ஹர்பஜன், சேவாக், தோனி என்று பல மேட்ச் வின்னர்களை கண்டெடுத்திருக்கிறார். இதற்க்கு அவர் பயன் படுத்தும் வழி முறைகள் எளிமையானது. திறமையானவர்களை கண்டுபிடிக்க நம்பிக்கையான ஆட்களை கைவசம் வைத்திருந்தார். அவர்களை அணிக்குள் கொண்டு வந்து போதுமான வாய்ப்புகளை அளித்தார். அணிக்குள் இருப்பமா, இல்லியா என்ற பயமில்லாமல் அவர்களுடைய இயல்பான ஆட்டத்தை ஆடச் சொன்னார். 'தோல்வியைப் பற்றி பயப்படாதீர்கள், உங்களுக்கு நான் இருக்கிறேன்' என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். கிரிக்கெட் போட்டி மைதானங்களில் விளையாடப்படுவதல்ல, நம்முடைய மனங்களில் விளையாடப்படுகிறது. உறுதியான மனமும், வெற்றிக்கான வேட்கையும் தோல்வி அடைவதில்லை என்ற கங்குலியின் வார்த்தைகள் புத்தகத்தின் பல இடங்களில் உதாரணத்தோடு சொல்லப்பட்டிருக்கிறது.

« « «

கங்குலியின் போராட்டம் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றதோடு முடிந்து விடவில்லை. அதற்கடுத்து வந்த ஐபிஎல்லிலும் அதே கதை தான். கொல்கத்தா அணி கேப்டன், ஷாருக்கானுடனான உரசல், பிறகு புனே அணியில் தேர்வாகி யுவராஜ் தலைமையில் விளையாடி அங்கும் கேப்டனாக இருந்து விலகும் வரை எப்போதுமே மலை உச்சியும் சரிவும் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது.

கங்குலியைப் பற்றியதான கட்டுக்கதைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் பெரும்பாலானவை வெறுல் கட்டுக் கதைகளே என்கிறார் சவுரவ். இந்திய அணிக்காக முதன் முதலில் தேர்வான போது தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்ல மறுத்தார். அதனால் தான் நான்காண்டுகள் திரும்ப அழைக்கப்படவில்லை என்பது உண்மையல்ல, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்கிறார். என்ன சின்ன பிரச்னை என்றாலும் உடனடியாக டால்மியாவிற்க்கு போன் போட்டு விடுவார் என்று இந்திய அணியிலேயே பலர் நினைத்ததையும் மறுக்கிறார். ஸ்டீவ் வாக்கை டாஸ் சமயத்தில் வேண்டுமென்றே காக்க வைத்தார் என்பதும் உண்மையல்ல என்கிறார் கங்குலி.

« « «

எப்போது இங்கிலாந்து சென்றாலும் முதன் முதலில் மேட்ச் விளையாட சென்ற ஹோட்டலை சென்று பார்ப்பது இவரின் வழக்கம். மிக சாதாரணமான, சிறிய சந்திலுள்ள அந்த ஹோட்டலில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது மகள் சானாவின் கேள்வி.

ஆனால் அங்கு நுழையும் போதே கங்குலியின் முகம் பிரகாசமடைவதை சானா கவனித்திருக்கிறார்.

‘ அப்பா, உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்குமா, கிரிக்கெட்டை ரொம்ப பிடிக்குமா' என்பது சானாவின் கேள்வி.

முகம் முழுக்க புன்னகையுடன் பதில் சொல்லாமல் கங்குலி கடந்து விடலாம். ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் போது தான் கிரிக்கெட்டை இந்த மனிதன் எந்த அளவிற்க்கு காதலித்திருந்தால் இவ்வளவு ஈடுபாட்டோடு இருந்திருக்க முடியும் என்பது தெரிகிறது. கங்குலியின் பேட்டிங்கைப் போலவே விறுவிறுப்பான புத்தகம், கிரிக்கெட்டை பற்றி போதிக்கவில்லை, வாழ்க்கையை போதிக்கிறது.

பிப்ரவரி, 2018.