ரோகிணி 
சிறப்புப்பக்கங்கள்

வழி காட்டிய வாசிப்பு

ரோகிணி

என்னுடைய பதினான்காவது வயதில் நான் தெலுங்கு எழுத்தாளர் மாலதி சந்தூர் எழுதிய உலக கிளாசிக் படைப்புகளைப் பற்றிய நூலை வாசித்தேன். அவர் அந்த படைப்புகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறியதுடன் அதை எழுதிய படைப்பாளிகளைப் பற்றியும் அதில் அறிமுகம் செய்திருந்தார். சுமார் இருபது படைப்பாளிகளும் அவர்களின் நூல்களும் அதில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொருவரின் படைப்புகளும் ஏன் செவ்விலக்கியங்களாகி ஏன் திரும்பத் திரும்பத் திருப்பப் படிக்கப்படுகின்றன என விளக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்டிருந்த இலக்கியங்களை நான் வாசித்தேன். மாலதி சந்தூர் எழுதிய பிற நூல்களையும் தேடிப் படித்தேன். அதுவரைக்கும் வாரப்பத்திரிகைகளில் வரும் படைப்புகளை மட்டும் படித்திருந்த எனக்கு புதிய வாயிலாக அது அமைந்தது. எனக்கு அவற்றின் மொழி புதிதாக இருந்தது. அவற்றின் தரம் விளங்கத் தொடங்கியது. எதைப் படித்தாலும் அவற்றுடைய தரம் என்னவென்று அடையாளம் காண்பதற்குத் தேவையான வாசிப்பு அறிவைப் பெறுவதற்கு அந்த நூல்தான் வழிகாட்டியாக அமைந்தது.

ஜூலை, 2018.