மதராசப்பட்டினத்தில் கிழக்கிந்திய கம்பெனி கால் ஊன்றிய தினமான ஆகஸ்ட் 22, 1639, சென்னை தினமாகக் கருதப்பட்டு கொண்டாடப்படுகிறது. புனித ஜார்ஜ் கோட்டைக்கான நிலம் வாங்கப்பட்ட நாள் அது. இது 379வது ஆண்டு. இதையொட்டி சென்னையின் பழைய பகுதியும் பூர்வ குடிகள் வசிப்பதாகவும் கருதப்படும் வடசென்னையின் நினைவுப் பதிவுகளை அப்பகுதியில் வாழும் எழுத்தாளர்கள் இங்கே பதிவு செய்திருக்கிறார்கள்.
சென்னையின் வளர்ச்சி குறைவாக நிகழ்ந்திருப்பதாகக் கருதப்படும் வடசென்னை கலாச்சார, வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதை இதன்மூலம் உணரமுடியும்.
ஆகஸ்ட், 2018.