விண்ணத்தாண்டி வருவாயா 
சிறப்புப்பக்கங்கள்

லவ் சார்...!

விண்ணத்தாண்டி வருவாயா?

கேபிள் சங்கர்

நான் சாதாரணமாய் படங்களை பல முறை பார்ப்பவன் அல்ல. இப்படத்தின் பிரத்யோக காட்சியை படக்குழுவினருடன் பார்த்துவிட்டு வெளியே வந்து. ‘‘நல்லாருக்கு பட். க்ளைமேக்ஸ் எடுபடுமானு தான் கொஞ்சம் டவுட்டாயிருக்கு'' என்று சொல்லிவிட்டு, காரேறிவிட்டேன். உடன் நண்பர் வந்திருந்தார். கார் ஏறிய மாத்திரத்தில் படத்தைப் பற்றிய பேச்சு வந்தது. படம் பற்றிய பேச்சு அப்படியே மெல்ல காதலைப் பற்றியதாய் மாறி மெல்ல, பர்சனலாய் அவரவர் காதலைப் பற்றி பேச ஆரம்பித்தோம். போகிற வழியில் ஒரு பார் தென்பட, ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு போகலாம் என்று நுழைந்தோம். ஏனோ அன்று பார் காலியாய் இருந்தது. பேச்சு மீண்டும் எங்கள் காதல்களைப் பற்றி, ஜெஸ்ஸி போன்ற பெண்ணைப் பற்றி பேசப் பேச மிகவும் எமோஷனலாகி, நாங்கள் வெளிவரும் போது மணி ஒன்று. அது கூட பார் மேனேஜர் தெரிந்தவராகையால் கிடைத்த நேர உபயம். கிளம்பும் போது சொன்னேன். இந்த படம் நிச்சயம் ஹிட். ஏன்னா.. நாப்பது வயசுக்காரய்ங்க நாமளே இத்தனை நேரம் இதைப் பேசுறோம்னா.. பொடிசுங் களுக்கு சும்மா ‘‘ஜிவ்வுன்னு இருக்கும். என்றேன்.

அதன் பிறகு நான் இப்படத்தை சுமார் 12 முறை தியேட்டர்களில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படம் பார்க்கும் போதும் பக்கத்தில் இருக்கும் இளம் ஜோடிகளின் பேச்சும், நடவடிக்கைகளூம் மிகச் சுவாரஸ்யமாய் இருக்கும்.

சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் படத்தில் மூழ்க ஆரம்பித்து, நெருக்கமாய் அமர்ந்து கொள்வார்கள். க்ளைமேக்ஸின் போது இருவரும் தனித்தனியாகவோ, அல்லது பப்ளிக்காக இருவரும் கை கோர்த்தோ செல்வார்கள். இப்படத்தை நான் அன்றைய நாட்களில் சிலாகித்து எழுதிய போது பலர் அப்படியென்ன இருக்கு இதுல? என்று கேட்டார்கள். லவ் சார்.. என்றேன்.

நவம்பர், 2018.