சிறப்புப்பக்கங்கள்

நேசிக்கக் கற்பது....

சுஜிதா

என்னோட இந்த நீண்ட கேரியர்ல குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயினாகவும் ஏராளமான கேரக்டர்கள்ல நடிச்சிட்டேன். ஆனால் அப்பவெல்லாம் கிடைக்காத மனமகிழ்ச்சியும், திருப்தியும் இப்பநான் நடிச்சிக்கிட்டிருக்கிற பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கேரக்டர்ல உணர்ந்துக்கிட்டிருக்கேன்.

பொதுவா ஒரு திரைப்படமாகட்டும், சின்னத்திரைத் தொடராகட்டும் எனக்கு அதில் நடிப்பதற்கான சூழ்நிலை இன்டரஸ்டிங்கா இருக்கணும். அப்புறம் அந்தக் காட்சியில நல்லா நடிக்கறதுக்கான ஸ்கோப் இருக்கணும் அதுதான் முக்கியம். அந்த இரண்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கேரக்டர்ல கிடைக்குது. அதனாலயே ஆனந்தமாக நடிச்சிக்கிட்டிருக்கேன்.

அதோடு இந்தத் தொடர் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் கற்றுக்கொடுத்திருக்கு. எல்லா சூழல்லயும் பொறுமையா இருக்குறது எப்படி, மாமியார்கிட்ட தன்மையா நடந்துக்கறது எப்படி, வீட்டில் இருக்கிறவங்களோட அக்கறையோட பழகுறது எப்படின்னு இங்கதான் கத்துக்கிட்டேன். முக்கியமா இரவு நேரத்தில் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறது ரொம்ப நல்ல விஷயம்னு புரிஞ்சதால இப்ப எங்க வீட்டிலேயும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டோம். இந்த மாதிரி நிறைய விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கேரக்டக்டர் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கு.

மத்தபடி, இப்ப நான் நடுத்தர வயதில் இருக்கிறதால பாண்டியன் ஸ்டோர்ஸ்ல எனக்குக் கிடைச்சிருக்கிற தனம் கேரக்டர் மாதிரியான முக்கியத்துவமான சிறந்த கேரக்டர்கள் கிடைச்சா மட்டுமே நடிப்பேன். அதோடு அந்த கேரக்டர் என் மனசுக்குப் பிடிச்சிருக்கணும். அப்படி எனக்குப் பிடிக்கிற நான் நேசிக்கிற நல்ல கேரக்டரை மட்டுமே தேர்வு செய்து நடிக்க இருக்கேன்.

ஆகஸ்ட், 2021