செல்லப்பிராணிகளாகவோ தியாக தீபங்களாகவோ எங்களைப் பார்க்க வேண்டாம். திறமை,வலிமை, ஆளுமை, மற்றும் கோபம், ஆத்திரம், கருணை, நேர்மை, பசி, தாகம், காமம், துக்கம் என்று எல்லா உணர்வுகளும் உள்ள சக மனிதர்களாய் எங்களையும் பாருங்கள்!&என்பதைத் தவிர பெண்கள் வேறு எந்தக் கேசத்தையும் ஆண்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. மாறாக, ஆண்களுக்குத் தான் பெண்களிடம் கணக்கில்லாத அநீதியான எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனை காலங்காலமாய் இயல்பென்று அனைவரும் மௌனமாய்க் கடப்பதைத் தான் நாம் எதிர்த்துக் குரலெழுப்ப வேண்டி இருக்கிறது.
1. ‘‘என்னைக் கல்யாணம் பண்ணி காலம் பூரா சோறு போடுறதுக்காக கார், வீடு, நகை எல்லாம் எதிர்பார்க்கிறாயே, நான் லவ் பண்ண பையனைக் கட்ட எங்க வீட்ல சம்மதிக்கலை. அவனுக்கு இதுல பத்து பெர்சன்ட் குடுத்துடலாம். மாசத்துல பத்து நாள் அவன் வீட்ல இருந்துக்கவா? என்ன டீல் ஓகேவா?''
2. ‘‘நேத்துதான் நமக்குக் கல்யாணம் ஆச்சு. அடுத்த நொடி உன் ட்ரெஸ்ஸை அயர்ன் பண்ணி வைக்கிறது உன் சாக்ஸைத் துவைக்கிறதுன்னு எல்லாத்தையும் செய்வேன்னு எதிர்பார்த்தா சாரி, நீ பழைய டிவிவிளம்பரங்களை அதிகமா பாக்குறேன்னு அர்த்தம்!''
3. ‘‘எங்கவீட்டு வழக்கம்னு சொல்லி புரட்டாசி மாசம் என்னை மட்டும் கறி தின்ன வுடாம பண்ணிப்புட்டு நீ திருட்டுத் தனமாவெளில போயி தின்னுட்டு வர்றியே? உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறேன். உன் குடும்பப் பெருமை பெருச்சாளி இதெல்லாம் எனக்குத் தேவையில்லை.''
4. ‘‘நான்தான் உனக்கு வேலை சொல்லிக் குடுத்த சீனியர். மீட்டிங்ஸ்ல நான் சொன்ன ஐடியாவை என் கிட்டயே வேற மாதிரி சொல்லி அதுக்கு நான் பூரிக்கணும்னு எதிர்பாக்குறியே... நீ என்ன லூசா?''
5. ‘‘தம்பி! வேலைக்குப்போற உங்கக்கா என்ன டிரஸ் போட்டுட்டுப் போனா உனக்கென்னப்பா? எதுக்கு அம்மா கிட்ட போய் அவளை இந்த டிரஸ் போட வேணாம்னு சொல்லுன்னு போட்டுக் குடுக்குறே? நீ பார்ன்ஹப் பார்த்து மனசு வக்கரிச்சுப் போனா போய்க் கிணற்றில் விழு ஞமலியே!''
6. ‘‘கட்டுனா இந்த மாதிரிப் பொண்ணைத் தான் கட்டணும்னு தினசரி அவங்க படத்தைப் பாத்துக்கும்புடுவியே, இப்போ அந்த நடிகை தன் கணவனைப் பிரிஞ்சதும் கேடு கெட்ட வார்த்தைகளைக் கொன்டு மீம் போடுறியே, என்ன ஆர்கானிக் உணவு உண்கிறாய்?''
7. இவ்வளவும் ஒரு பெண் சமூக வலைதளங்களில் எழுதுனா, ‘சபாஷ்
சாட்டையடி பதிவு தோழி!'ன்னு வழியுற நீ, ப்ரொபைல்ல ஒரிஜினல் படத்தை வெக்கக் கூடாது, பூ புய்ப்பம் படம்மட்டுமே வெக்கணும்னு உன் பொண்டாட்டி கிட்ட ஸ்ட்ரிக்ட்டா
நவம்பர், 2021.