சிறப்புப்பக்கங்கள்

தந்தை பெரியாருக்கு வ.உ.சி

Staff Writer

அன்பார்ந்த சகோதரர் அவர்களே

சேஷமம், சேஷமத்திற்கு கோருக்கிறேன்.

நாகபட்டினத்திலும், கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லோருக்கும் அசர் தோஷத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டு இடங்களிலும் எங்கள் வேலைகளை செய்து முடித்தோம்.

இப்பொழுது  உங்கள் உடல்நிலை பூரண சௌக்கியம் அடைந்து விட்டதா. ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்கு செல்லுதல் கூடும்.

என் மகன் chool annual examination தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனை படிக்க வைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்மெண்டுக்கு அவனை அனுப்பலாம் என்று நினைக்கிறேன். தகுதியான சிபாரிசு இருந்தால், முதலிலேயே circle inspector ஆகலாம். சதாரண சிபாரிசு இருந்தால், sub inspector ஆகலாம். தகுதியான சிபாரிசு எமக்கு கிடைக்குமா என்பதை பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள

வ.உ.சிதம்பரம்.

6.6.1928 அன்று தந்தை பெரியார் அவர்களுக்கு கப்பலோட்டிய தமிழன்

திரு. வ.உ.சி அவர்கள் எழுதிய கடிதம்.

மே, 2014.