எங்கள் குடும்பத்திற்கென்று ஓட்டல் தொழில் இருக்கிறது. அதில் வருகின்ற வருமானத்தை வைத்துதான் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்கிறோம். தொழிலை எப்படி நடத்துவது என்பது குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தினந்தோறும் கூடிப் பேசுவோம். தொழிலில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்துவிடுவோம். அதேபோல், எனக்கு வருகின்ற சம்பளத்தில் காருக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை நாலாயிரம் ரூபாய்க்கு டீசல் போடவேண்டியுள்ளது, ஏனெனில் தினந்தோறும் மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதால். அதேபோல், என்னுடன் வரும் இரண்டு பேர் மற்றும் ஒரு கார் டிரைவருக்கு தினந்தோறும் பேட்டா தருகிறேன். இப்போது இது தான் என்னுடைய தினசரி செலவு.
கொரோனா ஊரடங்கால் எங்களுடைய ஓட்டல் எதுவும் செயல்படவில்லை. தொழில் செய்கிறோம் என்பதால், ஏற்கெனவே இருக்கின்ற சேமிப்பை வைத்து குடும்பச்செலவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆடம்பர வாழ்வு கொரோனாவிற்கு முன்பாக இருந்தது, இப்போது அது இல்லை. அதிகபட்சமாக ட்ரெஸ், சாப்பாடு, மக்களை சென்று சந்திப்பதற்கு ஆகும் செலவுகளை மட்டும் தான் இப்போது செய்ய முடிகிறது. வேறு எந்த செலவுகளையும் இந்த ஊரடங்கில் செய்ய முடியவில்லை. இந்த பொருளாதார நெருக்கடியை யாரிடமும் போய் சொல்ல முடியாது. எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்.
ஜூலை, 2021