சிறப்புப்பக்கங்கள்

சிரிச்சிகிட்டே இருக்கனும்!

உமா சக்தி

சின்னத்திரையின் பிரபலங் களில் ஒருவரான ஆல்யா மானஸா, சமூக வலைதளங்களிலும் பெரிய பிஸ்தா. யூட்யூப், இன்ஸ்டாகிராம் என கலக்கிவரும் ஆல்யா, ராஜாராணி நெடுந்தொடரில் செம்பாவாக நடித்து மனம் கவர்ந்தவர். அவருடன் பேசியதிலிருந்து...

நெடுந்தொடர், யூட்யூப், இன்ஸ்டாகிராம் என ரொம்ப சுறுசுறுப்பாக இயங்குகிறீர்களே?

நான் காலைல ஐந்தரை மணிக்கு எழுந்திடுவேன், இரவு தூங்க 2 மணி ஆகிடும். இதுக்கு இடையில் ரொம்பவே பிசி ஷெட்யூல் தான். ஷூட்டிங், யூடியூப், விளம்பரம் அது இதுனு நேரம் சரியாக இருக்கும். முன்னாடியெல்லாம் விளம்பர ஷூட்டிங்னா பெரிய டீம் வொர்க்காக இருக்கும், அது நடிச்ச அப்புறம் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் எல்லாம் முடிஞ்சு கொஞ்சம் நாள் கழிச்சு தான் வெளிவரும் ஆனால் இப்போ இன்ஸ்டாகிராம்ல விளம்பரங்கள் செய்றது வித்தியாசமான அனுபவம். அப்பப்போ  பண்ற விளம்பரம் உடனேயே வெளிவந்துவிடும்

எல்லாரும் பார்க்கலாம். அது ரொம்ப சுவாரசியமா இருக்கு. அது மட்டும் இல்லாமல் எங்களோட சொந்த யூட்யூப் சேனலுக்கும் வீடியோஸ் பண்ணனும். ஷூட்டிங் லாம் போய்ட்டா நடுல ப்ரேக் கிடைக்காது. இதெல்லாம் முடிச்சுட்டு நான் தூங்க கண்டிப்பா 2 மணி ஆகும். அதுலயும் பாப்பா முழிச்

சிட்டு இருந்தான்னா அவ கூட நானும் முழிச்சுட்டு இருப்பேன். வேலையை ஜாலியாக செஞ்சா ஐயோ என்ன இவ்ளோ நேரம் வேல பாக்குறோம்ன்ற பீல் இருக்காது. ஏன்னா ரொம்ப

ரசித்து முழு மனதோடு பண்றோம்.  மன நிறைவாக இருக்கு. வேலை தான் ஓய்வுங்கறது தான் என் எண்ணம். என்ன இடைவேளை கிடைச்சாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க திட்டமிடுவோம். அடுத்தது நானும் என் கணவரும் எங்க குழந்தையும் துபாய் போக ப்ளான் பண்றோம். அதுக்கப்புறம் பயணக் கப்பலில் போக பிளான் பண்றோம். இந்த மாதிரி பயணங்களின்போது சின்னச்சின்ன வீடியோஸ் பண்ணலாம்னு திட்டமிருக்கு.

சமீபத்தைய சந்தோஷம்?

 சமீபத்தில் ராஜா ராணி&2 தமிழ்நாட்ல இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கும் தகவல் எனக்கு  மகிழ்ச்சி. இதுக்கு முன்னால நான்காவது எடத்துல இருந்துச்சு. இதே மாதிரி சப்போர்ட் இருந்தா முதலிடத்துக்குக்கூட சீக்கிரம் போய்டுவோம்.

சீரியலுக்கு முன்னாடி?

மூணு படம் நடிச்சிருக்கேன். ஜூலியும் நாலு பேரும் அப்படின்னு ஒரு படம். அது ரிலீஸ் ஆச்சு; ஆனா நல்ல வரவேற்பு இல்ல, அதுக்கப்புறம் யவனிகா என்ற ஒரு மலையாள படம் நடிச்சிருக்கேன் அப்புறம் ஒரு தமிழ் படம் நடிச்சேன் ஆனா அது ரிலீஸ் ஆகல. இன்னொரு  சீரியலும் நடிக்க பிளான் பண்ணிட்டு இருக்கேன் அது என்னோட ட்ரீம் ரோல். பிக் பாக்கெட் அடிக்கிற ஒரு குறும்பான பொண்ணு கேரெக்டர். அது கேக்க ஒரு மாதிரி இருக்கலாம் ஆனா உண்மைலேயே நல்லா இருக்கும். ஏன்னா அது என்னோட உண்மையான  துரு துரு கேரக்டர் மாதிரியே இருக்கும். அப்படிபட்ட ரோலுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

எப்படி இவ்வளவு அழகா, ஃபிட்டா எப்பவும் இருக்கீங்க?

கணவர் சஞ்சீவ்வோட அம்மா முன்னாடி ஒரு அழகுக் கலைஞராக இருந்தாங்க. அவங்க நிறைய டிப்ஸ் குடுப்பாங்க அது ரொம்ப உதவும். எனக்கும் இதுல ஆர்வம் அதிகம். அதுமட்டும் இல்லாம என் ஹஸ்பண்ட் ரொம்ப உதவியா இருக்காரு, நான் எவ்வளோ பிசியா இருந்தாலும் சரியான சமயத்துல

சாப்பிடு, ப்ரூட்ஸ் சாப்பிடுன்னு சொல்லிட்டே இருப்பார். நாம மனசுல என்ன நினைகிறோமோ அது தான் முகத்துல தெரியும். நான் மனசுல எதையும் போட்டு கொழப்பிக்க மாட்டேன். மன நிம்மதியா இருந்தா பார்க்க சந்தோஷமா அழகா இருப்போம். இவ்வளவு வேலை செய்றது எல்லாமே குடும்பத்துக்காக தானே, நாம நம்ம பேமிலி கூட நேரம் செலவழித்து எப்படி வச்சிக்கிறோம்.. அவங்க நம்மள எப்படி பாத்துகிறாங்க... இதெல்லாம் முகத்துல நிச்சயம் பிரதிபலிக்கும்.

வாங்கிய விருதுகள்?

ராஜா ராணி-1 க்கு முதல் ஆண்டிலும் இரண்டாவது ஆண்டிலும்  சிறந்த நடிகை அவார்ட் வாங்கினேன். மூணாவது ஆண்டு நான் கர்ப்பம் ஆகிட்டேன். அதுனால எப்படி அவார்ட் கிடைக்கும்னு

யோசிச்சிட்டு இருந்தேன்.  அந்த சமயம் தான் இந்த லாக்டவுன் வந்துச்சு.. யாருக்கும் கொடுக்கல.. இப்போ ராஜா ராணி&2 க்கும் செலெக்ட் ஆகி மறுபடியும் நாங்க ஷூட்டிங் போறது என் கரியர்ல  ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பிஹைண்ட்வூட்ஸ்ல இரண்டு விருது,  மோஸ்ட் பாப்புலர் ஆக்ட்ரெஸ், Best Pair அவார்ட் வாங்கிருக்கேன்.

உங்க யூட்யூப் சானலுக்கு ஆறுலட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்.. அதுல வர்ற கமெண்ட்ஸ்லாம் படிப்பீங்களா?

கமெண்ட்ஸ் நிறைய வரும், யூட்யூப்ல படிப்பேன் ஆனா இன்ஸ்டாகிராம்ல படிக்கிறத ஸ்டாப் பண்ணிட்டேன். ஏன்னா அங்க நிறைய நெகடிவ் கமென்ட்ஸ் வரும். அத படிச்சு நான் ரொம்ப அப்செட் ஆகிடுவேன். ஏன் இப்படி இருக்கீங்க, மெச்சூர்டா நடந்துக்கோங்க, அப்படி இப்படின்னு கமெண்ட்ஸ் வர்றப்போ நான் சோர்ந்து போயிடுவேன். ஆனா சஞ்சீவ் தான் எனக்கு ஆறுதல் சொல்லுவாரு. நானும் இப்போலாம் பெருசா கண்டுகிறது இல்ல. படிச்சுட்டு அப்படியே மறந்திடுவேன். என்கிட்ட நிறைய பேருக்கு பிடிச்சது, என்னோட ஸ்மைல் தான். அதுனால சிரிச்சிகிட்டே இருங்க. நீங்க நீங்களா இருங்க; யாருக்காகவும் மாத்திக்க வேணாம்.

ஆகஸ்ட், 2021