Cinema is the most beautiful fraud in the world.
-Jean Luc Godard
TO MAKE A FILM IS EASY; TO MAKE A GOOD FILM IS WAR. TO MAKE A VERY GOOD FILM IS A MIRACLE.
-Alejandro Gonzalez Inarritu
When I write an original story, I write about people I know first-hand and situations I'm familiar with.
- Satyajit Ray
IF IT'S A GOOD MOVIE, THE SOUND COULD GO OFF AND THE AUDIENCE WOULD STILL HAVE A PRETTY CLEAR IDEA OF WHAT WAS GOING ON.
- Alfred Hitchcock
மேலே உள்ள நான்கு மேற்கோள்களும் நல்ல
சினிமாவை எடுக்க நினைப்பவர்களின் விஸ்தாரமான அடிப்படைகளாக இருக்கலாம்.
தன்னை மறந்து சிரிக்கலாம்,நெகிழ்ந்து மனசு லேசாகலாம், பொய் என்று தெரிந்தும் அழலாம், பிரமிக்கலாம், சண்டை பார்த்து நாடி நரம்பெல்லாம் முறுக்கேறலாம், இப்படி எத்தனையோ 'லாம்'கள் நம் மனதில் பதியும் போது அந்த சினிமா வெற்றியடைகிறது.
கொட்டாவி வரலாம், சோம்பல் முறிக்கலாம், டீ குடிக்க,புகை பிடிக்க, பாப்கார்ன் வாங்க மற்றும் இன்ன பிற விஷயங்களுக்காக இருக்கையை விட்டு எழுந்து செல்ல வைக்கலாம். இப்படியான சினிமா என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும்.
' நீங்கள் திரையரங்கில் இருப்பதை மறக்கச் செய்வதே சினிமா' என்று ரோமன் போலன்ஸ்கி சொல்வதை போல இருந்தால் அது நல்ல சினிமா.
சினிமாவின் சுவராஸ்யத்தை கெடுக்கும்
சொதப்பல்களை இந்த சிறப்பிதழ் முன்வைக்கிறது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர்க்கும் போது திரைப்படம் மெருகேறும்.
நல்ல சினிமாவை உருவாக்க இந்த சிறப்பிதழ் உதவலாம்.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்.
நவம்பர், 2019 அந்திமழை இதழ்