சிறப்புப்பக்கங்கள்

சண்டைன்னா எம்.சி.ஆர் தாண்டே''

கலாப்ரியா

அப்பாவின் சினேகிதர் அந்த ஆசிரியர். அவர் வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்திலேயே அப்பாவுடன் படித்தவர். அப்போதெல்லாம் எஸ்.எஸ்.எல். சி தாண்டுவது என்பதே குதிரைக் கொம்பு. அப்பா எஸ்.எஸ்.எல்.சி தாண்டி இண்டர் மீடியட் சேர்ந்தார் என்று சொல்லுவார்கள். இரண்டு பேரும் எப்போதாவது சந்தித்துப் பேசிக் கொண்டால், சண்டை போடுவது போலத் தவறாமல் சொல்லிக் கொள்வது “ ஏல நீ என்னைப் பாத்து கணக்கு எழுதிப் பாஸ் பண்ணி கணக்கப் பிள்ளை ஆனவந்தானலே. ஏல நீ என்னைப் பாத்து காப்பியடிச்சு தமிழ் பாஸ் பண்ணி இன்னக்கி வித்துவானாகி வாத்தியானா வேற ஆயிட்டே.” அப்புறம் இருவரும் சமாதானமாகப் பேசிக் கொள்வார்கள். நான் அருகில் நிற்கும் நேரங்களில் எல்லாம், “ ஏ கந்தா, இவன் ஏன் இப்படி இளைச்சிப் போயிருக்கான், கணைச் சூடாயிருக்கும்ப்பா, நான் ஒரு நெல்லிக்காய் லேகியம் கிண்டித்தாரேன்.. கணச்சூட்டுக்கு நல்லது” என்று. சொல்லி விட்டு “வே பயில்வான் அப்படீ மேட்டுத் தெரு பக்கம் வாரும் சிலம்பு குஸ்தி எல்லாம் சொல்லித்தாரேன் என்பார். அப்பா, ”ஏய் போதும், ஏற்கெனவே அவன், ஒரு வாரியல் குச்சியை விடமாட்டேங்கான்... எடுத்து வாள் சண்டை போட்டுக் கிட்டு இருக்கான், நீ வேற,” என்பார். அப்படியா சங்கதி, நம்ம கிரவுண்டுக்கு வாரும் நிச வாள் சண்டையே சொல்லித் தாரேன், எம்.சி.ஆர் மாதிரி ஆயிரலாம்,” என்பார். நான் ஆசையாய் வாயைத் திறப்பதற்குள் அப்பா,“ஏல நீ இடத்தைக் காலி பண்ணு”  என்று அனுப்பி விடுவார்.

வித்துவான் உண்மையிலேயே சிலம்பம் குஸ்தி பள்ளிக் கூடமும் நடத்திக் கொண்டிருந்தார். தன் ஸ்கூலில் படிக்கும் பையன்களுக்கும், தெருப் பையன்களுக்கும் சொல்லிக் கொடுப்பார். ஸ்கூலில் கொஞ்ச நாள் வேலையை விட்டு நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது அவருக்கு இதுதான் சோறு போட்டது. மருந்து மாயம், மந்திரம் தந்திரம் என்று வேறு சில கரித் தொழில்களும் உண்டு. ஆனால் அவரது கட்டுரைப் பயிற்சி புத்தகம் ஒன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு உண்மையிலேயே உபயோகமாக இருந்தது. அவரது சிலம்புப் பயிற்சிக் கூடத்திற்கு  ஒரு முறை போயிருக்கிறேன். நாலைந்து பேர் இன்றைய லெக்கின்ஸ் போல பனியன் உடையணிந்து கொண்டு கம்பு சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அனேகமாக என் காலத்திய எல்லாச் சிறுவர்களும் ஒரு நாள் ஒரு பொழுதாவது தென்னை ஓலைக் (வாரியல்)குச்சியை வைத்து சண்டை போடாமல் இருந்திருக்க மாட்டார்கள். அப்புறம் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ என்று அது மாறிக் கொண்டே வந்திருக்கும். தமிழ்த் திரையுலகின் எழுதப்படாத விதிகள் இரண்டு.

சண்டைன்னா எம்.ஜி.ஆர். நடிப்புன்னா சிவாஜி.

ஜெய்சங்கர்ன்னு ஒருத்தன் இதுல, இரவும் பகலும் படத்தில நடிக்காம்லெ எம்.ஜி.ஆர் கணக்காவே சண்டை போடுதான் என்பார்கள். அல்லது ஏ.வி.எம்.ராஜன், சிவாஜி மாதிரியே நடிச்சிருக்காம் பாரு இந்தப் பந்தயம் படத்தில என்பார்கள். எம்.ஜி.ஆருக்கு முன்பும் எம்.கே.ராதா போன்ற விற்பன்னர்கள் இருந்தார்கள். எம்.கே.ராதாவின் தந்தையான எம்.கந்தசாமி முதலியார்தான் எம்ஜி.ஆருக்கு வாத்தியார். எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் எப்போதுமே ‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன், வந்த சண்டையை விட மாட்டேன்’ என்கிற ரகமாகவே இருக்கும். அநேகமாக எல்லாக் கதாநாயகர்களுக்கும் இந்த சூத்திரம் பொருந்தும். லேசாக இதழ் ஓரத்தில் ரத்தம் வரும் வரை அடிக்க ஆரம்பிக்க மாட்டார்கள். அப்புறம் விளாசுவார்கள். பார்க்கிறவர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும்.

பொதுவாக காதல் காட்சிகளில் நாயக நாயகியர்க்குப் பதிலாகத் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கனவு காணும் ரசிக ரசிகையர்கள் சண்டைக் காட்சிகளில் தாங்களே தங்கள் எதிரிகளை அடிப்பதாக மனதுக்குள் உணர்வார்களோ என்னவோ. ‘ஆயிரத்தில் ஒருவன் முதல் நாள் முதல்க் காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது கிளைமாக்ஸில் மனோகரின் முதுகில் பின்னாலிருந்து நம்பியார் கத்தியை வீசுவார். பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்தோணிராஜ், “மாப்பிளை, இப்படி யாராவது நம்ம டிரில் வாத்தியார் முதுகில எறியணும்லெ” என்று சொல்லி விட்டு, “பாருலே உய்க்காட்டானே எறிவான்” என்றான். உய்க்காட்டான் ஸ்போர்ட்ஸ் ரூம் பியூன். அவருக்கும் டிரில் வாத்தியாருக்கும் ஆகாது. பையன்களுக்கும்  அவன் வில்லன்தான்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வாள் சண்டைகள் அற்புதமாக இருக்கும். கடைசிக் காட்சியில் மனோகருடன் நடக்கும் சண்டைக்கு ‘ரேப்பியன் ஸ்வார்ட் ஃபைட்’ என்று பெயர் என்று அதன் சண்டைக் காட்சிகள் இயக்குநர் ஷியாம் சுந்தர் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அதுவரை தமிழ்ப் படத்தில் அது வந்ததில்லை. எம்.ஜி.ஆரும் மனோகரும் அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றதாக மனோகரும் சொல்லியிருந்தார். அது போக, நம்பியாரும் எம்.ஜி.ஆரும் இடும் வாள் சண்டையும் பிரசித்தமானது.

சண்டைக்கு முன்னதாகப் பேசிக் கொள்ளும் வசனங்களும் பிரமாதமான சண்டை ஒன்று வரப் போகிறது என்று கட்டியம் கூறும். மதங் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?- இது நம்பியார். சினம் கொண்ட சிங்கத்தின் முன் தோற்று ஓடும்- இது எம்.ஜி.ஆர். நான் தோல்வியையே அறியாதவன்.- நம்பியார். நான் தோல்வியை எதிரிக்கே பரிசளித்துப் பழக்கப் பட்டவன் - எம்.ஜி.ஆர். இது அந்தக் காலத்து பஞ்ச் டயலாக். அ.தி.மு.க ஆரம்பித்த புதிதில் ஒரு கூட்டம் பேசுவதற்கு வந்திருந்த அந்தப் படத்தின் வசன கர்த்தா ஆர்.கே சண்முகம் -ஐய்யோ அவர் அன்னக்கி சரக்கு கேட்டு பண்ணின ரவுசு இருக்கே, புதுக்கட்சியின் புதிய தொண்டர்களெல்லாம் நொந்து போனார்கள்- ஓட்டலில் வைத்து இதையே தன் மாபெரும் சாதனையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டைட்டில் போடும் போது அதில் அதற்குப் பிரபலமான மாஸ்டர் ஆர்.என்.  நம்பியார் இல்லையே என்று பலரும் வருத்தப் பட்டார்கள். ஆனால் ஷியாம் சுந்தர் நன்றாக அமைத்திருந்தார். ஆர்.என்.நம்பியார் எம்ஜி.ஆரது வாள் சண்டைப் படங்களுக்கெல்லாம் பயிற்சி அளித்தவர். நாடோடி மன்னன்,  அலிபாபா வாள் சண்டைகள் பிரமாதமானவை. ஸ்கேரோமச் என்ற ஆங்கிலப் படத்தின் வாள் சண்டைகள் போல ‘அரசிளங்குமரி’யில் அமைந்திருந்தது. வாள் சண்டைக்கென்றால் தமிழில் அதுதான் சிறந்த படம். எம்.ஜி.ஆர், தம் ராஜ அலங்காரங்களைக் களைந்து சமூக அவதாரம் எடுத்த ‘திருடாதே’ படத்தில் பிரமாதமான டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைகளை வடிவமைத்தவர் ஷியாம் சுந்தர். அதிலிருந்து அவர் எம்.ஜி.ஆரை விட்டு விலகவே இல்லை. திருடாதே படத்தில்தான் ‘டிஷ்யூம்’ என்ற ட்ரம் இசை வந்தது. அதற்கு முன்னால் ‘டொக் டொக்’ என்று சிரட்டை தட்டும் பின்னணி இசைதான். திருடாதே படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் ஒரே ஒரு விளக்கு கூரையிலிருந்து தொங்கியபடி சுற்றி வர இருளிலும் வெளிச்சத்திலும் நடக்கும் சண்டையும் திருடாதே படமும், எம்.ஜி.ஆரின் (திரை) வாழ்க்கையையே மாற்றி அமைத்தது என்றால் மிகையில்லை. பின்னால் வந்த குடியிருந்த கோயில் புதிய பூமி போன்ற படங்களுக்கு ‘சாமினாதன்’ என்பவர் சண்டை அமைத்திருந்தார்.

வாள் சண்டையில் ஸ்டண்ட் பலராமன், ஸ்டண்ட் சோமு ஆகியவர்களும் முக்கியமானவர்கள். ஸ்டண்ட் சோமு சிவாஜி படத்திற்குப் பொருத்தமானவர்.அவருக்கு சரியான டூப் ஆகவும் இருப்பார். எல்லா நடிகர்களுக்கும் முக்கியமாக அமைய வேண்டியது அவர்களது டூப் ஆர்டிஸ்ட். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மையோ இல்லையோ கதாநாயகனுக்கோ வில்லனுக்கோ டூப் அமைவது இறைவன் கொடுத்த வரம். எம்.ஜி.ஆரின் படங்களுக்கு டூப் ஆகவும் உதவி சண்டை இயக்குநராகவும் மாடக்குளம் அழகர் சாமி, தர்மலிங்கம், காமாட்சி என்ற சகோதரர்கள் பணியாற்றினர். அவர்களெல்லாம் திருமலை நாயக்கர் காலத்திலிருந்தே வஸ்தாதுகள். எம்.ஜி.ஆருக்கு மெய்க்காப்பாளராகவும் டூப்பாகவும் சிறப்பாக அமைந்தவர் ராமகிருஷ்ணன்.

எல்லா நடிகர்களும் காதல் காட்சிகள் படமாக்கப்படும் போது புதிய பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. அதற்கு அனுமதித்தால் கூட சண்டைக் காட்சிகளுக்கு அனுமதிப்பதேயில்லை. அதே போல சண்டைக் காட்சி எடிட்டிங்கின் போது விடவே மாட்டார்கள். புதிய பூமி படத்தின் ஒரு சண்டைக் காட்சி எடிட்டிங்கின் போது நான் அங்கிருந்தேன்.  என்னை மூவியோலா அறைக்குள் அனுமதிக்கவே இல்லை. தற்செயலாக படத்தயாரிப்பாளர் அங்கு வந்தவர் அழைத்துச் சென்றார். அதற்குள் கட்டிங் முடிந்திருந்தது. அப்போது. எம்.ஜி.ஆர் பார்க்க வருகிறார் என்று ஏ.வி.எம் ஸ்டுடியோவே பரபரப்பானது. தயாரிப்பாளர் உட்பட எல்லோரையும்  விரட்டாத குறையாக வெளியே அனுப்பினார்கள்.

எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்தபோது அல்லது பட்ஜெட்டுக்கு ஒத்து வராத போது ஜெமினி அல்லது எஸ்.எஸ்.ஆர் நடிப்பார். வீரக்கனல், பிள்ளைக் கனியமுது போன்ற படங்கள் உதாரணம். இருவர் சண்டைக் காட்சிகளையும் ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரை ரசித்தார்கள். அவர்களால் சிலம்பமோ வாளோ சுழற்ற முடியவில்லை. சிலம்புச் சண்டை, வாள்ச் சண்டைக்கெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அதிக டூப் தேவையில்லை. மற்றவர்களுக்கு வேண்டும். தாய்க்குப் பின் தாரம் படத்தில் காளைச் சண்டையும் சிலம்புச் சண்டையும் பிரபலம். அது வெற்றி பெற்றாலும் தேவருக்கும் அவருக்கும் பிரச்னை - சண்டை என்பது இன்னும் பொருத்தம்- ஏற்படவே, அடுத்து எடுத்த நீலமலைத் திருடன் படத்தில் ரஞ்சனை நடிக்க வைத்தார். அவரது வாள் வீச்சும் பிரமாதமாகப் பேசப்பட்ட ஒன்றுதான். சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள் (பழைய படம்) ஆகியவற்றில் நடித்த எம்.கே. ராதாவின் வாள்வீச்சும் பிரபலம். ரஞ்சன் நடித்த மின்னல் வீரன், ராஜா மலய சிம்மன் படங்கள் அவரது சண்டைக்காகவே இரண்டு மூன்று வாரங்கள் ஓடின. 

வாள் வீச்சு வரிசையில் வந்த இன்னொருவர், விஜயபுரி வீரன் ஆனந்தன். வீரத்திருமகன், நீயா நானா என சில நான்கு வாரப் படங்களில் வாள் வீசினார். தனிப்பிறவி படத்தில் எம்.ஜிஆருடன் ஒரு ஜூடோ போல ஒரு சண்டை போடுவார். ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாதிப்பால் ஜூடோவும் கராத்தேவும் தமிழிலும் எட்டிப் பார்த்தன. ஜெய்சங்கருக்கு திருவாரூர் எம்.எஸ்.தாஸ் என்று ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் அமைந்தார். அவர் இவற்றையெல்லாம் அறிமுகப் படுத்தினார். எம்.ஜி.ஆர் முகராசி படத்தில் முதன் முதலில் ஜூடோ சண்டை போட்டார். உ.சு வாலிபனில் நம்பியாரோடு போடும் ஜூடோ உண்மையிலேயே நல்ல ஜூடோவை நெருங்கி வந்தது. 1964 இல் வேட்டைக்காரன் படத்தில் கௌபாய் உடை மட்டும் அணிந்து வழக்கமான தேவர் பிலிம்ஸ் கதையில்- தாயைக் காத்த தனயன் படத்தின் சற்றே மாறிய வடிவில்-வழக்கமான சண்டை போட்டார். காமிரா மேன் கர்ணன் ஜெய் சங்கரை வைத்து எந்த லாஜிக்கும் இல்லாமல், தரையில் ஆரம்பிக்கும் சண்டை, பச்சை மலையில் ஏறி, பனிமலையில் சறுக்கி, பாலை வனத்தில் தூள் கிளப்ப கௌபாய் படங்கள் எடுத்துக் குவித்தார்.

ரகசியப் போலீஸ் 115 படத்தில் அறிமுகமான ஜஸ்டினுடன் எம்.ஜி.ஆர் போடும் கராத்தே நன்றாக இருக்கும். என்ன இருந்தாலும் சீன் கானரி, “ஃப்ரம் ரஷ்ய வித் லவ்” படத்தில் ஓடும் ரயிலில் போடும் ஸ்டைலிஷான சண்டையெல்லாம் தமிழில் வரவேயில்லை. தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரோ, ரவிசந்திரனோ அதற்கு அருகில் கூட வரவில்லை.ஜோரோ சீரிஸ் ஆங்கிலப் படங்களைப் போல காதல் வாகனம் படத்தில் சவுக்கடி ஸ்டண்ட் போடுவார். ஸோரோவின் ஙூ க்குப் பதிலாக கு என்று எதிரிகள் உடலில் சவுக்கால் வரைவார். அந்த ஙூ  ஸ்டைல் வரவே வராது.

சிலம்பம் பாக்ஸிங் போன்ற சண்டைகள் எல்லாப் படங்களிலும் இருக்காது. அதற்கென்று ஒரு காலகட்டம் வைத்திருப்பார் எம்.ஜி.ஆர். 1956 தாய்க்குப் பின் தாரம் படத்திற்குப் பின் ஆறு வருடம் கழித்து தாயைக் காத்த தனயன் படத்தில் சிலம்புச் சண்டை போடுவார். அதே போல் 1953 ல் வந்த ’நாம்’ படத்தில் பாக்ஸிங் சண்டை போட்டவர், 1967ல் காவல்காரன் படத்தில் மீண்டும் வைத்திருப்பார். காவல்காரனின் உல்ட்டாவான காக்கிச் சட்டையில் கமல் பாக்ஸிங் சண்டையோடு அறிமுகம் ஆவார். ’நாம்’ படத்தின் கதை போலவே கிராமத்தில் இருந்து பட்டணம் வரும் பட்டிக்காட்டுப் பொன்னையாவில் பாக்ஸிங் உண்டு ஆனால் ஒரே சொதப்பல் ஆக இருக்கும். மனசிருந்தால் நன்றாகச் செய்வார். உழைக்கும் கரங்கள் படத்தில்  மான் கொம்புச் சண்டை ஒரு கிளாஸிக். முகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பார். ஜெயலலிதா அடிமைப் பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை சொல்லித்தருவார். இதே போல ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் வி.என் ஜானகி எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை சொல்லித் தருவார். இரண்டிற்கும் சுமார் 19 வருட இடைவெளி. கதாநாயகிகளைப் பொறுத்து பானுமதி மதுரை வீரனிலும் சாவித்ரி இடது கையால் மகாதேவி படத்திலும் சண்டையிடுவது நினைவுக்கு வருகிறது. பாக்தாத் பேரழகி, வந்தாளே மகராசி படங்களில் ஜெயலலிதா சுருள் வாள் சண்டையும், சவுக்கடிச் சண்டையும் செய்வார். டான்ஸ் மூவ் மெண்டை ஒட்டி சண்டைக் கான ஸ்டெப்ஸ் இருக்கும். ரிவால்வர் ரீட்டா படங்களில் விஜயலலிதா, ஜோதி லட்சுமி சண்டைகள் கிளுகிளுப்பையே உண்டு பண்ணின. பாலாஜி படங்கள் எடுக்க ஆரம்பித்து சிவாஜியை வைத்து தங்கை எடுத்ததிலிருந்து சிவாஜியின் சண்டைப் படக் காலம் ஆரம்பித்தது. ராஜா படத்தில் சிவாஜி அழகாகப் பண்ணியிருப்பார்.எங்கள் தங்க ராஜாவிலும். பட்டாக் கத்தி பைரவன் பலி வாங்கி விட்டது.

அப்பாவின் சினேகிதரான வாத்தியார் சண்டைப் படங்களின் முதல் காட்சியில் வந்து பெஞ்சு டிக்கெட்டில் அமர்ந்து விடுவார். அநேகமான தியேட்டர்களில் அவரது சிஷ்யர்கள் இருப்பார்கள் அதனால் அவருக்கு ராஜ மரியாதை உண்டு. விட்டலாச்சார்யாவின் வீரத்திலகம் தொடங்கி ஜோதி லட்சுமிகளின் ரிவால்வர் ரீட்டா காலங்கள் வரை இப்படி அவரை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எல்லாம் கேட்பார், “ஏய் தம்பி கந்தசாமி மகன்தானே நீ... சண்டைன்னா ரொம்பப் புடிக்குமோ, சும்மா இருக்கற நேரத்தில கிரவுண்டுக்கு வாடே நாலு ஸ்டெப் சொல்லித்தாரேன், இவனுகள்ளாம் என்னடே சண்டை போடுதானுக,  எம்.சி.ஆர் குண்டு மணியவே முதுகில தூக்கி துணி துவைக்கிற மாதிரி நச்சுன்னு, சக்கரவர்த்தி திருமகள் படத்தில் ஒரு ‘டோபி சார்ஜ்’ அடிப்பாரு பாக்கணும், சண்டைன்னா எம்.சி.ஆர் தாண்டே,” என்பார். ஒரு  குட்டி சந்தோஷம் பரவும்.

ஜூலை, 2016.