சிறப்புப்பக்கங்கள்

கோலியும் கேரமும்

அரவிந்த்குமார்

சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரில் இரண்டு பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. அவற்றை அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் போர்டுகள் இவ்வாறு அறிவித்தன:

1 ‘‘ நகருக்கு முதல் பேட்ரோல் பங்க் கொண்டு வந்த மண்ணின் மைந்தனே''

2 ‘‘நகர மக்களின் நீண்ட நாள் கனவான ஏ.சி உணவகத்தை துவங்கிய எங்கள் அண்ணனே‘‘

இந்த சாதனை நிகழ்ந்தது  பின்தங்கிய ஒரு மாவட்டத்தின் கடைகோடி கிராமத்தில் இல்லை.   பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் இரண்டு வார்டுகளை உள்ளடக்கிய சென்னை 600057 என்ற பின்கோடு கொண்ட எண்ணூர் நகரத்தில்தான் இது நடந்தது. 2011ஆம் ஆண்டு

சென்னை மாநகராட்சிக்கு மாறிய போதிலும்  

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த வளர்ச்சியையும் எண்ணூர் பகுதியும் அது சார்ந்திருக்கும்

கத்திவாக்கம் நகராட்சியும் பெறவில்லை. தாம்பரமும், வேளச்சேரியும், மடிப்பாக்கமும், திருவான்மியூரும், பூவிருந்தமல்லியும் அடைந்த வளர்ச்சி ஏன் எண்ணூரை அடையவில்லை?

வளர்ச்சிக்கு தொழில்வளர்ச்சிதான் முக்கியக் காரணம் என்றால் எண்ணூரை விட தொழிலில் வளர்ந்த இடம் இங்கே ஏது? இந்தியாவிலேயே கனரக வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் அசோக் லைலேண்ட், அதற்கான என்ஜின் பாகங்களை தயாரிக்கும் (இந்துஜா) எண்ணூர் பவுண்டரிஸ், தமிழக முதலீட்டாளர்களின் அடையாளமாக உள்ள முருகப்பா குழுமத்தின் பாரி உர தொழிற்சாலை, கொத்தாரி உர தொழிற்

சாலை, ஐ.சி.ஐ. மருந்து தயாரிப்பகம், எண்ணூர் அனல் மின் நிலையம், மத்திய கனிம வள ஆய்வகம் என பல தொழில் நிறுவனங்கள் எண்ணூருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்துவிட்டன. அதன் அருகில் உள்ள திருவொற்றியூரில் எம்.ஆர்.எப் டயர்ஸ், விம்கோ தீப்பெட்டி தொழிற்

சாலை, எவரெடி பேட்டரிஸ், கே.சி.பி சிமெண்ட்ஸ் என எண்ணிலடங்கா தொழில்õலைகள் உள்ளன. மணலியையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். எண்ணூர் உப்பங்கழி ஆற்றை கடந்தால் எண்ணூர் துறைமுகம், எல் அண்ட் டி கப்பல் கட்டும் தொழிற் சாலை, கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் உள்ளிட்டு பத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.  ஆனால் இந்த தொழில் வளர்ச்சி ஏன் எந்த கட்டமைப்பு

வசதிகளையும் கொண்டுவரவில்லை?

அரசு எப்போதாவது தவறி ஏதேனும் ஒரு நல்லதை செய்துவிட்டாலும், அதிகாரிகள் அது மக்களை அடையாமல் பார்த்துக்கொள்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு மாநகர போக்குவரத்து கழகத்தால் எண்ணூர் பணிமனைக்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்துகள், ஒரே ஒருநாள் மட்டுமே இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டன. பிறகு மந்தைவெளி பணிமனையில் குறிப்பிட்ட சில விளையாட்டுக்களை சென்னையை தவிர வேறுஎங்கும் பார்க்க முடியாது.

சோகு... நான்குபுறம் முனைமழுங்கிய பழைய 5 காசு அல்லது 10 காசு அல்லது அறுங்கோண வடிவிலான 20 காசு. இதுவே இந்த விளையாட்டின் மூலப்பொருள். கொஞ்சம் வளப்பமான பிள்ளைகள் ஒரு ரூபாய் நாணயத்தைக் கூட பயன்படுத்துவார்கள். ஒரேமாதிரியான இரண்டு நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் 20 காசு தான். இரண்டு 20 காசு நாணயங்களை ஒட்டுவது போல் பிடித்துக் கொள்ள வேண்டும். கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலில் பிடித்துக் கொண்டு ஒருவர் மேலே தூக்கி வீச, அருகில் நிற்கும் நபர் ஹெட் அல்லது டெய்ல் என்று பந்தயம் கட்டுவார். எங்க ஊர் பக்கம் பூவா, தலையா என்று பச்சைப் பிள்ளைகள் கூட பேசாது. காரணம் ஆங்கிலேயர்களுக்கும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் 300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே துபாஷ் வேலை பார்த்தவர்கள் எங்க வடசென்னைக்காரங்க தான். அதனால் ஆங்கிலம், தெலுங்கு, உருது, டச்சு என்ற பலமொழிகள் இங்கு கலந்தே பேசப்படும்.  இரண்டு நாணயங்களிலும் சேர்ந்தார்போல் பூ விழுந்தால் பந்தயம் கட்டியவர் வெற்றி, மாறி விழுந்தால் தோல்வி. இதற்கான பந்தயமே காசு தான். ஒவ்வொரு சிறுவனின் பாக்கெட்டிலும் எப்படியும் 50 ரூபாய்க்கு குறையாக நாணயங்கள் இருக்கும்.  அடிச்சு ஜாண் போட்றது.. கோலி,  சிறுவர்களை பைத்தியம் பிடிக்க வைக்கும் முக்கியமான விளையாட்டு. அளவில் பெரிய கோலிகள் டூமா என்று அழைக்கப்படும். சிறியவை கோலிகள் தான். இதில் பல விளையாட்டுக்களை

 சிறுவர்கள் விளையாடுவார்கள். கோலி விளையாட்டில் சூரன் யார் என்றால் அடிச்சு ஜாண் போட்றவன் தான். இரண்டு பேர் நின்று கொள்ள, ஒருவன் கோலியை தூக்கி வீச வேண்டும். மற்றொருவன் குறிபார்த்து AiUP வேண்டும். தவறிவிட்டால் முதலில் கோலியை வீசியவன் அதனை Gkzx எதிராளியின் கோலியை குறிவைத்து தாக்க வேண்டும். கோலி பட்டுவிட்டால் குத்துமதிப்பாக 5 ஜாண், 6 ஜாண் என்று கூறவேண்டும். நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கோலி இருக்கும் இடம்வரை விரலில் ஜாண் போடுவார்கள். குறைவாக இருக்கலாம், ஆனால் சொல்லிய அளவை விட கூடுதலாக இருக்கக்கூடாது. சிறுவர்கள் கண்களாலேயே அளவெடுத்து அசால்ட்டாக

சொல்லிவிடுவார்கள், எத்தனை ஜாண் என்று.

வடசென்னைக்கே உரிய தனித்துவமான விளையாட்டுக்களில் கேரம் போர்டு ஒன்று. விடிய, விடிய நேரம்போவதே தெரியாமல் ஆடப்படும் விளையாட்டு. எவ்வளவுக்கெவ்வளவு கடினமானவர்கள் என்று வடசென்னைவாசிகள் அறியப்படுகிறார்களோ, அதற்கு மாற்றாக அவர்களின் மிகநுண்ணிய அவதானிப்புகளை அடையாளம் காணவேண்டுமென்றால் கேரம் போர்டு பந்தயத்திற்கு வாருங்கள். கவனம், பொறுமை, நுண்ணிய முடிவு என வடசென்னைக்காரர்களை கேரம் போர்டு விளையாட்டில் AizxU கொள்ளவே முடியாது.

திருப்பதிக்கு குடை கொண்டுபோவது வடசென்னையின் முக்கிய விழாக்களுள் ஒன்று. அதனால்தான் என்னவோ, சிவராத்திரியை விட வைகுண்ட ஏகாதசி வடசென்னை முழுவதும் விருப்பமுடன் கொண்டாடப்படும். அன்றைய தினம் இரவு முழுவதும் பெண்கள் பரமபதம் விளையாடுவார்கள். மற்றவர்கள் இதனை தாயக்கட்டை அல்லது தாயம் என்பார்கள். எங்கள் ஊரில் இது தாயபாஸ். பெண்கள் தொடையில் தட்டி, தட்டி, விரலை சொடுக்கி தாயயயயம் என்று நீட்டி முழக்கி சொல்லி விளையாடும் அழகே அழகு. 

ஆகஸ்ட், 2018.