சிறப்புப்பக்கங்கள்

கணினிப் பெண்கள் நாங்கள்

ஐ.டி. துறை

தாரணி பத்பநாபன்

2000ல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த பெரும்பான்மையோர் போல கணினி துறையில் வேலைக்கு சேர்ந்து இதோ 11 வருடங்கள் ஓடி விட்டது. குறைவில்லாத வேகமும் விறுவிறுப்பும் கொண்ட பயணமாகவே இத்துறையில் பணி இருந்து கொண்டு வருகிறது.

பெங்களூர்ல ஐ. டி. வேலையா ஐயோ ரொம்ப ஸ்ட்ஸ்ரெஸா இருக்குமா? பொண்ணுங்களுக்கு இந்த வேலை தேவையா என்ன? நம்ம ஊர்ல  பேராசிரியர் வேலை கிடைக்காதா? M.கூஞுஞிட படியேன்?  என்ன இருந்தாலும் அரசு பணி போல இருக்குமா ?ஙு2ஓ போன்ற சூழ்நிலை வந்தா வேலை என்னாகும்?

அத்தனை அத்தனை கேள்விகளின் மத்தியில் கல்லூரியில் இருந்து பெங்களூர் வந்து சேர்ந்த பத்து தோழிகள் நாங்கள்.

சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், கணினி, எலக்ட்ரானிக்ஸ்,  இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றிருந்த நாங்கள், வெவ்வேறு நிறுவனங்களில் கணினி பொறியாளர்  வேலையில்  சேர்ந்தோம்.

குடும்பப் பின்னணி மற்றும் சூழ்நிலையில் வேறுபட்டிருந்த நாங்கள், இன்று பொருளாதார சுதந்திரத்தோடும், சமூக அந்தஸ்துடன் இருப்பதற்கும்,  இந்த கணினித்துறை பணியும் அதன் சம்பாத்தியமும் அனுபவமும் முக்கியமானவை!

முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியான என்  தோழி, தன் கடினமான  உழைப்பால் வெளிநாட்டு மென்பொருள் வேலையில் அமர்ந்து தன் அறிவாற்றலால்  மிக சில வருடங்களில்  தன் பெற்றோர்க்கு என  வீடு கட்டிமுடித்தாள்!

சிறிய வயதில் தந்தையை இழந்து, அறிந்தவரின் உதவித்தொகையில் பொறியியல் படித்த இன்னொரு தோழி, இன்று திருமணமாகி அமெரிக்காவில் மென் பொறியாளராக இருக்கிறாள்.  அம்மாவிற்கான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து, தன் தாயை போலவே கணவனை இழந்த மாமியாரையும் சேர்த்தே கவனித்துகொள்கிறாள்!

குடும்பத்தின் பொருளாதாரத்தை  தாங்குவதுடன் நிதி ரீதியான முடிவெடுப்பவர்களாகவும் பெரும்பான்மை பெண்கள் இருக்கின்றோம். பெண்களின் பொருளாதாரம் - குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எத்தனை அவசியமானது என்பதையும் ஆண்-பெண் சமநிலை உறவிற்கும் முக்கியம் என்பதையும்  வளர்ச்சி அடைந்த குடும்பங்களில் காணமுடிகிறது. ‘என்ன இது.. உங்க பொருளாதாரம் உயர்ந்திருச்சு,  நீங்க செலவு செய்றதால எங்களுக்கு விலை கூடி போச்சு’ என்ற புலம்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இலட்சங்களில் சம்பளம் இருந்தும் தேவையையும் அவசியத்தையும் புரிந்து, தங்கள் குழந்தையைப் பொறுப்பாக வளர்க்கும் அம்மாக்கள் இருப்பதும் இங்கு உண்டு.

வசதியான பணியிடங்கள், நடப்பு டெக்னாலஜியுடனான வேலை, வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை, கணிசமான ஆரம்பநிலை ஊதியம், இவையெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், பெண்கள் அதிக அளவில் விரும்பும் துறையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம்  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற எச். ஆர். திட்டங்களாகும்.

இரண்டாயிரமாவது ஆண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட கணினி பெண் ஊழியரின் கொலைக்குப் பின்னால் பெரிய நிறுவனங்களும்(Infosys , Wipro, HCL TCS, ...etc ) அனைத்தும் தங்கள் நிறுவன பெண்களின் பாதுகாப்பில் உறுதியாக உள்ளனர். (விதிவிலக்குகள் இங்கேயும் உண்டு)!

பணி முடிந்த இரவு பயணங்களில் பெண்களின் பாதுகாப்பு,  அலுவலகத்தில் எந்நேரமும் பாதுகாப்பு ஆகியவற்றை எங்கள் பெண் தோழியர் பெற்றிருக்கிறோம்.

அத்துடன் பெண்களுக்கு எதிராக  நிகழக்கூடிய தொல்லைகளை விரைவாகவும் நம்பகமாகவும் தீர்த்துவைக்கும் குழுக்கள் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. கணினி மென்பொருள் பணியின் இன்றியமையாத பகுதி - தொடர் கற்றல், புதுப்பித்தல்! பெண்களின் இயல்பான கற்றல் ஆற்றல், மாறும் தொழிற்நுட்பத்துக்கு ஈடு கொடுப்பதினால் பெண்கள் இயல்பாகவே இத்துறையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆரம்ப படி நிலை(fresher) பணிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கின்றது. ஏழில்  ஒருவர் பெண்ணாக இருக்கின்றனர்/இருந்துள்ளனர். ஆரம்ப நிலை பணியில் அதிகம் இருக்கும் பெண்கள், மேல் படிநிலைகளில் சொற்பமாக இருக்கின்றனர்! ஆனாலும் இங்கு வயது வரம்பு disadvantage  ஆக இருப்பதில்லை.

மகப்பேறு விடுப்பில் சென்று குழந்தை வளர்ப்பிற்காக  பணியிலிருந்து விலகுபவர்களில் கணிசமானோர் சில வருடங்களில் மீண்டும் பணியில் சேருகின்றனர்.

இதற்கான அடிப்படை காரணம்  வேலை காலத்தில் கிடைக்கும் அனுபவமும் அதன் மூலம் பெரும் கற்றல் திறனுமாகும்!

ஒரு சில நிறுவனங்களில் அரை நாள் வேலைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகம் வந்து, அவர்கள் வீடு திரும்புவதற்குள் பணி முடித்து செல்லும் பெண்களுடன் வேலை செய்திருக்கிறோம்!

வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பும் அதிக அளவிலான நிறுவனங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. இணைய வசதியும் புதிய பரிமாணத்தில் வெளிப்பட்டு கொண்டிருக்கும் தகவல் தொடர்பு application களும், வீட்டிலிருந்து பணி செய்வதற்கு நிறுவனங்களை ஏற்று கொள்ள செய்கின்றது!

‘பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்காக’, ‘பெற்றோர் உடல்நலக்குறை’ , AC ஒத்துக்கொள்ளும் உடல்நிலை இல்லை ’ என்ற சில காரணத்திற்காக வீட்டிலிருந்து வேலை செய்கிறேன் எனினும் மெயில்கள் ஒரு வாரத்திற்கு  10ஆவதுஇருக்கும்!

வேலை நேர Flexibility  யும் பெரிய நிறுவனங்களில் இருக்கிறது - அலுவலகத்திற்கு வருவதற்கும் போவதற்குமான கால நெகிழ்வுதன்மை. இது ‘வரமா சாபமா’ என்ற அளவுக்கு விவாதங்கள் எங்களுடைய பெண்கள் குழுவில் நிகழும்.

வீட்டுவேலையை முடித்து பணி அலுவல்களை விடிய விடிய செய்யும் நிலை எங்களுக்கு அடிக்கடி ஏற்படும்!

கணினி துறையின் வேலைகள் பல்வேறு அளவுகளிலும் பரிமாணங்களிலும் இருக்கின்றன!

செயல்திட்டத்தின் தேவை,  வடிவமைப்பு, தயாரிக்கப்பட்ட பொருளின் இறுதி செயல்பாடு, அதனை சோதித்து சரி பார்க்க, குறை நீக்குதல், வெளியீட்டு திட்டம், மார்க்கெட்டிங், ஆவணப்படுத்தல், வாடிக்கையாளர் எங்கேஜ்மெண்ட், மேனேஜ்மென்ட்  என ஒவ்வொரு பணி படிநிலையில் பெண்கள் பங்கு நீக்கமற இருக்கிறது.

இத்தனை நன்மைகள் இருக்கும் பணி இடத்தில், வெளி உலகத்தில் இருப்பதுபோன்ற சவால்களும் இருக்கின்றன.

ஊதிய வித்தியாசம், அதன் பாலின பாகுபாடு இங்கும் மிகுந்திருந்தது. பெண்கள் என்றால் நிரந்தர ஊழியர் என்ற நினைவு பல இடங்களில் இருந்து கரைந்துவிடுகின்றது. தங்களுக்கு தகுந்த இடத்தைப் பெற போராட்டம், பெண் என்பதால் 10-20% அதிகமாவே இருக்கின்றது.

அதே போல பதவி உயர்விலும் பெண்களுக்கு கொடுக்கவேண்டுமா, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை இருக்கிறது. என்றோ ஒரு நாள் இவர்கள் நிறுவனத்துக்கு அதிக உபயோகமில்லாமல் போய் விடுவார்கள் என்ற எண்ணம் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது!

தங்கள் பணி குழுவுடனான தொடர்புகள், மேலாளர்களுடனான networking  ஆகியவற்றில் சுலபமாக இயங்கும் ஆண்களுக்கு மேற்கூறிய

சிரமங்கள் குறைவாக இருக்கலாம்.

அதுபோல அன்றாட பணிகளில் விரும்பிய வேலையை தேர்வு செய்யவும், திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கவும் பெண்களுக்கு ஒரு புலப்படாத

சவால் இருப்பதாகவே உணர்கிறேன்.

மேலாளராக கணிசமான பெண்கள் இருந்தாலும், தொழில்நுட்ப ஆய்வாளர்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்கள் மட்டுமே இருக்கின்றனர் . இதற்கான காரணம் தீவிரமாக ஆராயப்படவேண்டும்!

திறமைக்கு குறைவே இல்லை! எல்லா தாய்மார்களை போலவே தங்கள் குழந்தையை  தூங்க வைத்துவிட்டு ண்ட்ச்ணூt வேலை செய்து கச்tஞுணtண் எனப்படும் அறிவு காப்புரிமை தாக்கல் செய்த பெண்களும் இங்கு இருக்கிறார்கள்; எங்களுக்கு டிணண்ணீடிணூச்tடிணிண ஆக !

திறமையில் எந்த குறைவில்லாத பெண்களுக்கும் மேற்கூறிய  சவால்கள் தொடர் சுமையாகவே இருக்கின்றன. அடுத்தது நிறுவன தலைமை பதவிகள். 10 தலைவர்களில் 2 பெண் தலைவர்கள் இருப்பது சாத்தியமாகி இருக்கிறது. ஐணஞூணிண்தூண் போன்ற நிறுவனங்களில், 2020ல் 25 சதவீதம் பெண் தலைமை இருக்கச் செய்யவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

குறைகள் என்ற நீண்ட பட்டியல் இருந்தாலும் கணினி பொறியாளர் பணியில் பெண்களாக நாங்கள் பயணிப்பது உற்சாக குறைவில்லாமல் இருந்துகொண்டிருக்கிறது!

மார்ச், 2017.