சிறப்புப்பக்கங்கள்

என்னுடைய முதல் ரசிகை அவர்!

கோவை அனுராதா, நடிகர்

என்னுடைய அக்கா வீட்டுக்காரர் என் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியர் ஒருவரிடம் சென்றிருக்கிறார். அதே ஜோசியரிடம் இடனொருவர் ஒரு பெண்னுடைய ஜாரகத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இரு வரையும் பார்த்த ஜோசியர் இந்த பொருத்தமே நல்வாருக்கே என்று சொல்லியிருக்கிறார். அப்படித்தான் சஎனக்கு 1974ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னுடைய மனைவி பெயர் கங்கா. அந்த கங்கை மாதிரியே தூய்மையான வாழ்க்கை நடத்துவதற்குப் பெரிதும் உதவி செய்து வருகிறார்.

எங்களுடைய திருமரத்திற்கு முன்பாகவே, மாலை முரசில் வெளிவந்த என்னுடையகதைகளைப்படித்திருக்கிறார் கங்கா, நான் ஒரு எழுத்தாளர் மற்றும் நாடகக்காரன் என்பது அவருக்குத் தெரியும். இதெல்லாம் தெரிந்துதான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பிள்ளாலும், ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வார்கள். என்னுடைய மனைவி என் கையைப் பிடித்துக் கொண்டு வருபவர்.

திருமணமான புதிதில் நாடகங்களுக்காக உள்ளூர், வொரியூர் என எங்கேயாவது சென்றுவிடுவேன். இதற்காக அவர் வருத்தப்பட்டதே கிடையாது. என்னுடைய கதைகளையெல்லாம் படித்துவிட்டு கருத்து சொல்லும் முதல் ரசிகை அவர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதில் தாள் வாழ்க்கை இருக்கிறது. இன்றைக்கும் ‘ஐலவ் மை வொய்ஃப்', திருமானமாகிறாற்பத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. பெரிய சண்டைகள் எதுவும் வந்ததில்லை. இரட்டை தலைமை இருந்ததால் குடும்பத்தில் பிரச்சனை வரும். நான் என்ன முடிவு எடுக்கிறானோ, அதை அவரிடம் சொல்வேன். சரியாக இருந்தால், சரி. தவறாக இருந்தால் தவறென்று சொல்லிவிடுவார். எதைத் திருத்திக் கெ வேண்டும் என்பதையும் மனம் நோகாத அளவிற்குச் சொல்வார்.

திருமணமாகி முதல் பதினைந்து வருடம் எந்த வருமானமும் இல்லை. அப்போது அஞ்சல் துறையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடிக்கடி விடுமுறை எடுத்துக் கொண்டு நாடகத்திற்கு சென்றுவிடுவேன். இதனால் வருகின்ற சம்பளமும் குறைவாகத்தான் வரும். "நாடகத்திற்காக ஏன் இப்படி வெட்டியா உழைக்கிறீங்கணு' ஒருநாள் கூட அவர் என்னிடம் கேட்டது கிடையாது. நாள் எவ்வளவு பணம் கொண்டு வந்து தருகிறேனோ, அதற்கேற்ற மாதிரி செலவு செய்து, மூன்று பெண் பிள்மைகளைப் பெற்றெடுத்து, அவர்களைப் படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுக்கும் அளவிற்கு குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகித்து வந்திருக்கிறார். எங்கள் வீட்டில் இருக்கும் கம்பியூட்டர், செல்போன், ஏடிஎம் கார்ட் உள்ளீட்ட எல்லாவற்றிற்குமான பாஸ்வேர்ட் இரண்டு பேருக்கும் தெரியும். அவருக்கு ஒரே ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்க, பதினைந்து வருடங்கள் ஆனது அப்படியும் அந்த புடவை வாங்குவதற்கு அவர் சம்மதமே தெரிவிக்கவில்லை. முதுமையிலும் நேசிப்பவர்கள் தான் சிறந்த கணவன் மனைலியாக வர முடியும்.

ஆகஸ்ட், 2022