சிறப்புப்பக்கங்கள்

இளைஞர் முன்னேற்றமே கனவு!

பத்மப்ரியா

நான் எப்போதும் ஒரு விஷயத்தை உறுதியாக நம்புவேன். மக்கள் பங்கேற்பு உள்ள நிகழ்வுகள் தான் நூறு சதவீதம் வெற்றியடையும் என்று. என்னுடைய கனவு, லட்சியம் எல்லாம் எதை மையப்படுத்தியது என்றால், இளைஞர்களின் முன்னேற்றம், அவர்களின் ஒருங்கிணைவு தொடர்பானது. அவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் பெரிய சமூக மாற்றமே ஏற்படும். இப்போது அந்த கனவை நனவாக்கும் விதமாக  ‘விதை விதைப்போம்' மூலமாக பள்ளிக் கல்லூரிகளில் பல்வேறு சமூக செயல்பாடுகளின் மூலமாக இளைஞர்களை ஒன்று திரட்டிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களின் ஒன்றிணைவை சமூக மாற்றத்திற்கானதாக மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கையிலும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பது என்னுடைய முனைப்பும் கனவும். இதற்கான காரணம் என்னவென்றால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போது மட்டும் தான் நாளைக்கான நாளை நம்மால் உறுதிப்படுத்த முடியும். எதிர்காலத்தில் நாம் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், இளைஞர்கள் இன்றைக்கு ஒன்று கூடி அதை மாற்றினால் தான் முடியும்.

என்னுடைய கனவு, சிந்தனை எல்லாமே இளைஞர்கள் முன்னேற்றத்தை சார்ந்து, அவர்களை முன்வைத்து சமூக மாற்றத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதுதான்.

அக்டோபர், 2022