அந்திமழை சார்பாக நாற்பது வயதுக்குட்பட்ட எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை சிலமாதங்களுக்கு முன்பாக அறிவித்தபோது சற்று தயக்கமாகத் தானிருந்தது. எவ்வளவு பேர் எழுதுவார்கள்? என்ன எழுதுவார்கள்? தரமாக இருக்குமா? என்ற தடுமாற்றங்கள்.
ஆனால் எல்லா யோசனைகளையும் தவிடுபொடியாக்கி விட்டார்கள் இளம் எழுத்தாளர்களும் வாசகர்களும். சுமார் நூற்றைம்பது கதைகள் போட்டிக்கு வந்து குவிந்திருந்தன.
இப்போட்டியின் நடுவர்களாக செயல்பட எழுத்தாளர்கள் கவிதா முரளிதரன், பாக்கியம் சங்கர், அதிஷா ஆகியோரைக் கேட்டுக்கொண்டோம். இவர்களுடன் அந்திமழையின்
ஆசிரியர் குழுவினரான இளங்கோவன்,
அசோகன், கௌதமன் ஆகியோரும் இணைய, போட்டிக்கு வந்த கதைகள் அலசி ஆராயப்பட்டு, முதல் கட்டமாக பரிசுக்குரிய கதைகள் தேர்வு செய்யப்பட்டன.
ஆனால் அடுத்த கட்ட சவால் அவற்றில் முதல் மூன்று பரிசுகளுக்கான கதைகளைத் தேர்வு செய்வது. அதற்கான ஒருமித்த கருத்துக்காக சில நாட்கள் விவாதித்தோம். சமூகப் பிரச்னை பேசும் இருகதைகளையும் மனித உணர்வுகளைப் பேசும் உணர்ச்சிகரமான இன்னொரு கதையிலும் இந்த விவாதம் மையம் கொண்டு, இறுதிப் பட்டியலை வந்தடைந்தோம்.
தேர்வானவர்கள், இதுபோல் மேலும் சிறந்த கதைகளை எதிர்காலத்தில் எழுதுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் பாக்கியம் சங்கர். பெண்ணியம், அரசியல் சார்ந்த பார்வையுடன் கதைகளை அணுகிய கவிதா முரளிதரன், இக்கதைகளை வாசித்தது மிகச்
சிறந்த அனுபவமாக அமைந்தது என்றார். எழுத்தாளர் அதிஷா, இச்சிறுகதைகளில் இருக்கும் வாழ்வனுபவம் நெகிழ்ச்சியூட்டுவதாகப் பகிர்ந்துகொண்டார்.
இளம் எழுத்தாளர்கள் இவ்வளவுபேர் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்டது நிறைவை அளிக்கிறது. கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
தேர்வான கதைகள் அனைத்தும் இந்த இதழிலேயே வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுப்பட்டியல்:
முதல் பரிசு, ரூ 10000 : நட்சத்திரம் பார்த்த
சிறுவன் - அரவிந்தன் -
இரண்டாம் பரிசு, ரூ 7500 : தி கிரேட் தில்ரூபா
- ந.சிவநேசன்
மூன்றாம் பரிசு, ரூ 5000 : விடியும் முன்
- ராஜேஷ்
ராதாகிருஷ்ணன் -
சிறப்புப் பரிசுகள்:- ரூ 3000
ரேணுகா - ஸ்வர்ணா
கொண்டுகூட்டு - பாபு கனிமகன்
பரி நரியாகிய படலம் - திருமுருகன் காளிலிங்கம்
ஷைத்தான்- கா.ரபீக்ராஜா
அரசதூது - திருமாறன் ராதாகிருஷ்ணன்
துப்பறிவாளனின் செய்திக்குறிப்புகள்- பிரகாஷ் சுந்தரம்
ஊக்கப் பரிசுகள்-: 2250
அலுக்கை வாசனை- அண்டனூர் சுரா
யானைமலை - ஸ்ரீதர் பாரதி
ஒருநாள் பயணம் - சுபஸ்ரீ தேவராஜ்
துரோகம் - அன்புக்கரசி ராஜ்குமார்
ஜனவரி, 2023.