கடிதங்கள்

விடிவுகாலம்!

Staff Writer

காணாமல் கண்கள் ஏங்க, மனம் கரைய அந்திமழையாய் ஜூனில் வந்தவுடன் எங்கள் மனதிலே எழுந்த கோஷம் தான் அட்டைப்பட வாசகம், ‘எழுக நீ தலைவா!'. வணிக நோக்கில் வரும் கமர்சியல் இதழ்களின் சமீபத்திய விற்பனை சறுக்கலுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், மாலன் சொன்னது போல கருத்தாக்கமும், உள்ளடக்கமும் நவீன மாற்றமும், தோற்றமும் கொண்டால் தான் இனி பருவ இதழ்களுக்கு விடிவு காலம்.

அண்ணா அன்பழகன் , அந்தணப்பேட்டை.

அறுசுவை விருந்து

இரு மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த அந்திமழை மனதில் பெருமழையாகப் பொழிய மகிழ்ச்சியின் விளைச்சல் அமோகம். நன்றி. அவர்கள் அவர்களே தொடரில் பேராசிரியர் அ.சங்கரவள்ளிநாயகம் அவர்களின் தனித்துவமான குணங்கள் பற்றி நான் அறிந்ததை விட... இன்னும் அதிகமாகவே உணர்த்தியிருந்தார் ப.திருமாவேலன். எல்லோரையும் ஈர்க்கும் இனிய குணங்கள் அவை. அந்திமழை இளங்கோவனின் மண்டேலாவின் சொற்கள் இன்றைய இந்தியா சிந்திக்க வேண்டிய பொருளாதாரப் பார்வையை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியது. ரொறோன்ரோ தமிழ் இருக்கைக்குப் பணம் அனுப்பிய பாரீஸ் ஈழத்தமிழர் நெகிழ வைத்தார்...அ.முத்துலிங்கம் அவர்களுக்கு நன்றி. வண்டல் சிறுகதை படிக்கும்போதே நாவில் நீருறியது. பாவண்ணனின் சொல் வெளிப்பாட்டுக்கு சொல்லவா வேண்டும் .அருமை. சிறப்புப் பக்கங்களாய் அமைந்த வெள்ளித்திரையில் விளையாட்டு...பகுதியில் சும்மா புகுந்து விளையாடி விட்டீர்கள். ஆசிரியர் குழுவின் உழைப்பிற்கு பாராட்டு. தரமான படைப்புகள். வெற்றிக்கு என்ன தேவை எனத் தொடங்கிய கேள்விக்கு சிறப்புப் பக்கங்கள் பகுதிக்கு நிறைவான பதிலைத் தருவதாய் அமைந்திருந்தது இயக்குநர் சுசீந்திரனின் ‘பின் விளைவுகளை யோசித்தால் எந்த சமூகப் படைப்புகளையும் உருவாக்க முடியாது... என்ற அவரின் நேர்காணல் வரை அத்தனையும் சிறப்பான பக்கங்கள். பான் சிங் தோமர் என்ற புரட்சியாளன் பற்றிய எண்ணங்கள் என்னை உலுக்கின... எப்படிப்பட்டவனை இப்படி ஆக்கியது இந்த சமூகம் என சிந்திக்க வைத்தது. ஷாஜியின் ஆடத்தெரியாத ஆட்டக்காரன் கட்டுரை பல விவரங்களை மேலும் புரிய வைத்தது. எவ்வளவு சொல்ல. ஆட்டம் பற்றிய எழுத்து விருந்து அறு சுவை விருந்து...அவ்வளவுதான்.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன் சென்னை - 89

பொன் எழுத்து!

கரோனா நெருக்கடி காலத்தில் தங்கள் இதழ் வரவில்லை, தபால் இயக்கமே நின்று விட்டது, உலகமே பதற்ற நிலை, அந்திமழை கையில் கிடைத்ததும் ஒரு மகிழ்ச்சி. இந்தியா & சீனா எல்லையில் 1962&இல் பிடித்த பீடை இன்னும் தீரவில்லை, நாடே நாட்டை பிடித்து என்ன சுகம் அனுபவிக்க வானவில் கடிதங்கள் விடிவுகாலம்! காணாமல் கண்கள் ஏங்க, மனம் கரைய அந்திமழையாய் ஜூனில் வந்தவுடன் எங்கள் மனதிலே எழுந்த கோஷம் தான் அட்டைப்பட வாசகம், ‘எழுக நீ தலைவா!'. வணிக நோக்கில் வரும் கமர்சியல் இதழ்களின் சமீபத்திய விற்பனை சறுக்கலுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், மாலன் சொன்னது போல கருத்தாக்கமும், உள்ளடக்கமும் நவீன மாற்றமும், தோற்றமும் கொண்டால் தான் இனி பருவ இதழ்களுக்கு விடிவு காலம். & அண்ணா அன்பழகன் , அந்தணப்பேட்டை. இருக்கிறது? இதன் தாக்கமே ஒரு பொதுவுடைமை இயக்கம் பிரிய வழி வகுத்தது, அந்த விரிசல் ஒட்டவில்லை, ஒட்டாது, காரணம் தான் எடுத்தது தான் சரி என்ற வாதம். திருமாவேலன் மேடைதந்த பேராசிரியர் கட்டுரையில் நடந்ததை சிறப்பாக எழுதியுள்ளார். கோவில்பட்டி திருக்குறள் மாத விழாக்களுக்கு கீழக்கலங்கலில் இருந்து சுமார் 65 கி.மீட்டர் சைக்கிளில் வந்து புத்தகக்காட்சி போடுவேன், ஐயா சங்கரவள்ளிநாயகம் பாராட்டியுள்ளார். அவர்கள் இல்லத்தில் சாப்பிட்டும் இருக்கிறேன். திருவள்ளுவர் வழியை கடைப்பிடித்த அற்புதமானவர். அதில் கடைசியில் எழுதிய வாக்கியம் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வாசகம்.

தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்

கருத்துப் புதையல்!

‘அந்திமழை' ஜூன்2020 இதழில் இடம்பெற்றிருந்த அந்திமழை இளங்கோவன் எழுதியிருந்த ‘மண்டேலாவின் சொற்கள்!' கருத்துபுதையலென்பேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணியால் கிட்டும் நன்மைகள், ஒரு நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை அடையும்போது அரசு, பணத்தை தாராளமாக புழக்கத்தில் விடவேண்டும், பெரும்பாலான அரசுகள் பேச்சி லொன்றும், செயலிலொன்றும் நடைமுறைப்படுத்தும் காட்சி களையும், முதிர்ச்சியடைந்த நாடுகள் பணத்தைப் பற்றித்தான் கவலைப்படும், பொருளாதாரம் மேம்பட அத்துணை தடைகளையும் தளர்த்தி, வியாபாரத்தளங்களை திறந்து மக்கள் வெளியே வந்து கொள்முதல் செய்யும் சூழல் வரவேண்டும் எனும் பொருளாதார நிபுணர்கள் கூற்றை முன் வைத்திருப்பதுடன், கொரானாவை விட பசி கொடிது என்ற உண்மை நிரூபணமாகியிருக்கிறது போன்ற கருத்துகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அருமை.

பவள வண்ணன், நடுவிக்கோட்டை.

சிந்திக்க வைத்தது!

யாரையும் குற்றம் சொல்ல முடியாதபடி, இயற்கையின் திடீர் பேரிடர் தாக்குதல் தான் கரோனா & இது ஏன்! உலக நாடுகளுக்கும், மக்களுக்கும் எதையோ போதிக்க, அல்லது தண்டிக்க, அதன் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொள்ள ஒரு பயிற்சி வகுப்பானதோ ஊரடங்கு! புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம், ஐயகோ! பிறந்த இடத்திலேயே வாழ வழியின்றி பசிக்காக மக்கள் அலைவது அரசுக்குத்தான் அவமானம், இந்த மக்களிடம் போய் சேராத அரசு திட்டங்கள் அரசியல் அதிகார வர்க்கத்தால் சுரண்டப்படும் போது வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்? மக்களும் எவ்வித குறிக்கோளும், முன்னேற்ற வேட்கையும் இல்லாமல், அன்றாடங்காய்ச்சியாகவே வாழப் பழகிக்கொண்டதால் எதிர்பாராத சோதனைகளில் கலங்கி காணாமல் போகிறார்கள். அரசும் மக்களும் இணைந்து உயர வழி காண்போம், இப்படியாக நிறைய சிந்திக்க வைத்தது, அந்திமழை இளங்கோவனின் ‘மண்டேலாவின் சொற்கள்' கட்டுரை.

அ.யாழினி பர்வதம், சென்னை - 78

இதழியல் உண்மை!

ஏப்ரல், மே 2020 அந்திமழை இதழ்களை மின்னிதழ்களாக தந்து, ஓரளவு வாசகர்களை மகிழ்வித்தமைக்கு நன்றி. எப்படியாயினும் அச்சிதழ்களைப் படித்து சுவைப்பதற்கு ஈடாகாது. அந்திமழை இதழ்களில் இதுவரை வெளிவந்த சிறு கதைகளை ஒட்டுமொத்தமாக கூடுதல் பக்கங்களில் ணீஞீஞூல் வெளியிட்டு படிக்கமுடியாமல் திணறியதை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. படிக்கத்தவறிய சில கதைகளை பார்த்து பெருமூச்சு விட்டதுதான் உண்மை. கொரோனா கொடியவனால் இது நிகழ்ந்துவிட்டதே என்று ஆதங்கப்பட்டேன், அனைவரையும் படிக்கத்தூண்டும் அந்திமழை படைப்புகள் நடுநிலையோடுகாலத்திற்கேற்ப சுவை மாறாமல் விருந்து வைக்கும் வண்ணம் வந்து கொண்டிருந்த அந்திமழை இரு திங்கள் கைகளில் தவழாமல் போனது வருத்தமே! இதழ்கள் சேகரிப்பில் எனக்கு பல்வேறு இதழ்கள் வரினும் சில இதழ்களை புரட்டிபடிக்காமல் இருப்பது பெருந்துன்பம்! மாலன் கட்டுரை பருவ இதழ்களின் பரிணாமத்தை பட்டை தீட்டி அளித்திருப்பதுசிறப்பு. இதழியல் துறையில் சுவடு பதித்தவர்களின் வரலாற்றை அப்படியே கண்முன் கொணர்ந்து காட்சிப்படுத்தியிருந்தது அருமை, எவ்வாறு இடர்பாடுகள் இருப்பினும், நல்லிதழ்கள் மறைந்து போனாலும், புதிய இதழ்கள் அப்போதைக்கப்போது மலர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது இதழியல் வரலாறு காட்டும் உண்மை.

நவீன் குமார், நடுவிக்கோட்டை.

சிறப்பு!

ஆசிரியர் கௌதமனின் கட்டுரை கண்டேன், ட்ரிபிள் சூப்பராக உள்ளது, கடைசி 9 வரிகளை கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கலாம். காமிரா கண்கள் படங்கள் சூப்பர், எதை பாராட்டுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.

அ. முரளிதரன், மதுரை

காத்திருக்கிறேன்!

நீண்ட காத்திருப்பு - முத்துலிங்கம் எழுத்து மனதைத் தொட்டது! தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழை இணைத்துக் கதைத்துக் களிப்படைவார்கள்! ஷாஜி அவர்களின் ஆடத்தெரியாத ஆட்டக்காரன் சிறப்பாக அமைந்துள்ளது. என்றுமே ஆண்கள் திருமணம் முடிந்ததும் தன் பெருமை பேசுவார்கள், மனைவியின் திறமை அடுக்களையுடன் முடிந்துவிடும். அவரின் நண்பர் ராணுவத்தில் பணி புரிந்தமையால் சரியான நேரத்தில் ஷாஜிக்கு நினைவு ஊட்டினார் என்றே சொல்ல வேண்டும். எங்கள் சிறுவயதில் ஹாக்கி தான் நெல்லை மக்க ளுக்கு சிறந்த விளையாட்டு! ஜூலை மாதம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் !

ஆறுமுகம், மின்னஞ்சல் வழியாக