பிரதமர் மோடியுடன் மு.க. ஸ்டாலின் 
அரசியல்

பிரதமர் சொன்ன 5 டி’கள் எங்கே? 5 சி’கள்தான்!- ஸ்டாலின் தாக்கு!

Staff Writer

பிரதமர் சொன்னதற்கு மாறாக, வகுப்புவாதம், முறைகேடுகள், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுதான் இந்த ஆட்சியில் இருக்கின்றன என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவுக்காகப் பேசுவோம் என்கிற பாட்காஸ்ட் தொடரில், இன்று இரண்டாவது பதிவை ஸ்டாலின் வெளியிட்டார். அதில்தான் அவர் இதைக் கூறியுள்ளார்.

“ முதல் முறை பிரதமராக ஆனபோது, 5 டிகள் அதாவது (Talent) திறமை, (trading)வர்த்தகம், (tradition)பாரம்பரியம், (tourism)சுற்றுலா, (technology)தொழில்நுட்பம் ஆகியவைதான் முக்கியம் என்று மோடி சொன்னார். இந்த டி-களில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?

5 சி-கள் கொண்டதாகத்தான் இன்றைய ஆட்சி இருக்கிறது. அதாவது, communalism வகுப்புவாதம், corruption ஊழல் முறைகேடுகள், corporate capitalism மூலதனக் குவியல், cheating மோசடி, character assasination அவதூறுகள்.” என்றும்,

”இவ்வாறு, அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம்வரை எல்லாவற்றிலும் 7.5 இலட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருக்கிறார்கள். இதுவரை இதற்கு பிரதமரோ- சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. அதனால்தான் இதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சியின் முகத்திரையை, பிரதமர் மோடியின் பிம்பத்தை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி விட்டது.” என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.