சாட் ஜிபிடி (மாதிரிப்படம்) 
உலகம்

கூகுள் கதையை முடிக்குமா ஓப்பன் ஏ.ஐ.?

Staff Writer

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக சாட் ஜிபிடி (ChatGPT) இல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம்.

கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி எனும் 'ஜெனரேட்டிவ் ஏஐ' சாட்பாட்டை அறிமுகம் செய்தது. இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இச்சூழலில் சாட் ஜிபிடியில் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையிலான தேடுதலை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது.

தற்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 'ப்ரிவியூ வெர்ஷன்' கடந்த ஜூலையில் சர்ச் ஜிபிடி (SearchGPT) என்ற பெயரில் மாதிரி வடிவமாக வெளியானது. அதனை 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்த முடிந்தது.

கூகுளுக்கு போட்டியாக இணைய உலகில் ஓபன் ஏ.ஐ. களம் கண்டுள்ளது. பயனர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இது கூகுளுக்கு டப் கொடுக்குமா என்பது தெரிய வரும். chatgpt.com மூலம் டெஸ்க்டாப், மொபைல் செயலியில் இதனை பயன்படுத்தலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram