உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடப்பு ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று தொடங்கின. அதன்படி முதலில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பியரே அகோஸ்தினி, ஜெர்மனியின் பெரென்க் க்ரவுஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆனி ஹூலியர் ஆகிய விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக வழங்கப்படுகிறது.
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்களின் இயக்கம் குறித்து இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.