உலகம் முழுவதும் இலக்கிய ஆர்வலர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் பரிசு, இன்று அறிவிக்கப்பட்டது.
தென்கொரிய எழுத்தாளர் ஹான்காங்குக்கு அவருடைய கவித்துவ உரைநடைக்காக நடப்பு ஆண்டுக்கான பரிசு அளிக்கப்படுகிறது.
வரலாற்றுரீதியான மனவடுக்களையும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தக்கூடியதுமான கவித்துவ உரைநடை இவருடையது என்று நோபல் குழு பாராட்டியுள்ளது.
அவர்தன் படைப்புகளில் கண்ணுக்குத் தெரியாத வாழ்க்கையின் விதிகளைக் கையாள்கிறார் என்றும்
மனித உடலுக்கும் மனதுக்கும் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆழ்ந்த உணர்வு கொண்டவராக இருக்கிறார் என்றும்,
அவருடைய கவித்துவமான, சோதனை முயற்சியிலான பாணி, சமகால உரைநடை இலக்கியத்தில் புதிய திறப்பாக அமைந்துள்ளது என்றும் நோபல் குழு பாராட்டியுள்ளது.