ஜோ பைடன் 
உலகம்

ஜோ பைடனுக்கு கொரோனா... பிரச்சாரம்?

Staff Writer

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் நவம்பரில் நடைபெறக்கூடிய அடுத்த அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான இலேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்வேகாசில் நடைபெற்ற என்.ஏ.ஏ.சி.பி. மாநாட்டில் பங்கேற்ற அவர், எதிர்க்கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதேநேரம், அமெரிக்காவில் ஆயுத வன்முறை தலைதூக்கியிருப்பதையும் அவர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டினார்.

அங்கு இருக்கும்போதே அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

“உடனடியாக அவர் அதிபர் இல்லம் உள்ள டெலாசருக்குத் திரும்புவார். அங்கு அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வார். அதேசமயம் தன் கடமைகளை முழுமையாகச் செய்வார்.” என்று வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதையடுத்து பைடன் தன் எக்ஸ் பக்கத்தில், “ எனக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் நலமாக இருப்பதாகவே உணர்கிறேன். தனிமைப்படுத்திக்கொள்ள இருக்கிறேன். அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி. மக்கள் பணியைத் தொடர்ந்து செய்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றால் பைடனின் பிரச்சாரத்தில் சற்று சுணக்கம் ஏற்படும் என்பது உறுதி. ஏற்கெனவே, டிரம்புக்கு பிரச்சார நன்கொடை அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram