ஐரோப்பிய ஒன்றியம் 
உலகம்

ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த புது தடை!

Staff Writer

ஈரான் தொடர்புடைய ஏழு நபர்கள், ஏழு நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடையை விதித்திருக்கிறது.

பிரஸ்ஸல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கியது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதற்காக ஈரான் நாட்டின் மீது தடை விதிக்க அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, ஈரான் துணை பாதுகாப்பு அமைச்சர் சையத் அம்சே கலந்தாரி உட்பட ஏழு பேர் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரான் நாட்டின் முக்கியமான விமான சேவை நிறுவனமான ஈரான் ஏர், சாகா ஏர்லைன்ஸ், மகான் ஏர் ஆகியவற்றின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனுக்கு எதிரான போரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் டிரோன்களையும் தாங்கள் பெற்றுள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியது. அதன்படி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விகள் எழுந்த நிலையில் ரஷ்யத் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஈரானுடன் உறவு வளர்ந்து வருவதாக மாஸ்கோ தெரிவித்தது.

முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்னர், ஈரான் பேலிஸ்டிக் ஏவுகணைகள், அத்துடன் தொடர்புடைய தொழில்நுட்பத்தை ரஷ்யாவுக்கு வழங்கியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram