ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகத் தலைவர்கள் நடக்கும் ஏ.ஐ. தொழில்நுட்ப வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோவை இதுவரை 120 மில்லியன் பார்த்து ரசித்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், நேற்று எக்ஸ் வலைத்தளத்தில் செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை, பகிர்ந்தார். அதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், மற்றும் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலகின் முன்னணி நாட்டு தலைவர்கள், உலக பிரபலங்கள், பேஷன் அணிவகுப்பில் பங்கேற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அதில் எலான் மஸ்க் பங்கேற்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
அவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 120 மில்லியன் பார்த்துள்ளனர். ஒவ்வொரு பிரபலத்தின் உடையும் அவர்கள் நாட்டின் பாரம்பரியம் அல்லது அவர்களின் புகழைச் சொல்லும் வகையில் நவீன பாணியில் வடிவமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களை ரசிக்கத் தூண்டியது.
வீடியோவின் இறுதியில் மைக்ரோசாப்ட் நிறவனர் பில்கேட்ஸ், ''ரன்வே ஆப் பவர்' என்று டேப்லெட் கணினியை ஏந்தி நடந்து வருவது போலவும், இறுதியில் அந்த திரை செயலிழந்து நீலவண்ணத்தில் காட்சி அளிப்பதுபோல வீடியோ நிறைவடைந்தது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப வீடியோவை யார் உருவாக்கியது என்பது வெளியிடப்படவில்லை.