தேர்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, உடனே விடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு 20 மில்லியன் டாலர் நன்கொடையாக வந்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். தன்னுடைய தோல்விக்கு தேர்தலில் நடைபெற்ற முறைகேடுதான் காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றனர். இதனால், டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், ஜார்ஜியா நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, நேற்று டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவருக்குக் கைதி எண் வழங்கப்பட்ட நிலையில், பிணைத்தொகையாக 1 கோடியே 80 லட்சம் கட்டி விடுதலையானார்.
டிரம்பின் கைதும் விடுதலையும் அவரின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில், நேற்று மட்டும் டிரம்பிற்கு நன்கொடையாக 4.18 மில்லியன் டாலர் வந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 38 கோடி ரூபாய் ஆகும். டிரம்பிற்கு இதுவரை 7.1 மில்லியன் டாலர் நன்கொடையாக வந்துள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ட்ரம்பிற்கு சுமார் 20 மில்லியன் டாலர் நன்கொடையாக வந்துள்ளது.
வழக்கு - கைதுக்கு மத்தியில் டிரம்பின் நிதி திரட்டும் திறமை, அமெரிக்க அரசியலில் அவரின் செல்வாக்கைக் காட்டுவதாக பலரும் கருதுகின்றனர்.