இலங்கை பிரதமருடன் கியூபத் தூதர் சந்திப்பு 
உலகம்

இலங்கையின் மருந்துத் துறையில் கியூபா முதலீடு!

Staff Writer

இலங்கையின் மருந்து உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய கியூப அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியாவை நேற்று அவரின் அலுவலகத்தில் அந்நாட்டுக்கான கியூபத் தூதர் ஆந்திரேஸ் மாசர்லோ கன்சலஸ் கொரிடோ சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய பிரதமர் ஹரிணிக்கு அவர் வாழ்த்தைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான 65 ஆண்டு கால அரசமட்டத் தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி உரையாடப்பட்டது.

கியூப உதவியால் செயல்படுத்தப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட கொசு ஒழிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, இலங்கையின் கல்வி நிறுவனங்களுக்கு மருத்துவம், விளையாட்டு உதவித்தொகை வழங்குவது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கியூபா தன்னுடைய கடும் பொருளாதார சிரமங்களுக்கு இடையிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு தந்துவருவதற்கு ஹரிணி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கியூப அரச தலைவர் இலங்கைக்கு வருகைதர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram