கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தினர் அங்குள்ள கோயிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தினர். அதில் பணியில் இல்லாத காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் பங்கேற்றார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.
அதையடுத்து ஹரிந்தர் சோகி எனப்படும் அந்த காவல்துறை நபர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், அவர் தாக்குதலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்கச் சென்றார் என்றும் அப்போது அவர்களுடன் அவருக்கு கைகலப்பு ஏற்பட்டது என்றும் கனடா போலீஸ் இப்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனடிய காவல்துறையின் கருத்துப்படி, ஹரிந்தர் சட்டப்படி தன் கடமையைச் செய்துள்ளார் என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹரிந்தர் மீது குற்றம் சாட்டுவோர் அவர் சீருடை அணியாமல் அதுவும் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய வீடியோவை ஆதாரம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.