ஏரியல் கெல்லர் 
உலகம்

மிகப் பழமையான ஜாடியை உடைத்த சிறுவன்... பாடம் புகட்டிய அருங்காட்சியகம்!

Staff Writer

3500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்த சிறுவனை, மீண்டும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு இஸ்ரேலின் ஹைஃபா நகரில் அமைந்துள்ளது ஹெக்ட் அருங்காட்சியகம். அண்மையில், இந்த அருங்காட்சியகத்துக்கு தன் குடும்பத்தினருடன் வந்த நான்கு வயது சிறுவன் ஏரியல் கெல்லர், 3500 ஆண்டுகள் பழமையான ஜாடியை தவறுதலாக கீழே தள்ளி உடைத்துவிட்டான். இதை உடனே மீட்டெடுத்த அருங்காட்சியகம், பழையபடியே அந்த ஜாடியை இருந்த இடத்தில் வைத்தோடு, அதை பார்வையிடவும் கெல்லருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தன் அம்மாவுடன் அருங்காட்சியகத்துக்கு வந்த கெல்லரிடம், அந்த ஜாடியை எப்படி மீட்டெடுத்தோம், அது எவ்வளவு பழமையானது என்பதையும் அருங்காட்சியகத்தினர் எடுத்துக் கூறினர். அப்போது கெல்லருக்கு, உடைந்த மற்றொரு சிறிய ஜாடியை மீட்டெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தை சிறுவனுக்கு கற்றல் வாய்ப்பாக மாற்றிய அருங்காட்சியக இயக்குநர் இன்பால் ரிவ்லின் இந்த செயல் நிச்சயம் பாரட்டக்கூடியதுதான்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram