ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2060 பேரை தாண்டியுள்ளதாகவும் 6 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியது.
இந்த நிலநடுக்கத்தால், சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன.135 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதேபோல், பலியானோர் எண்ணிக்கையும் 2060 பேரை தாண்டியுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமாா் 1,000 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.