நேபாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர். 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியில் நேபாள ராணுவம், காவல், ஆயுதப்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
நேபாளத்தில் ஏராளமான இந்தியர்கள் உள்ளதால் அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஹரியானா, பஞ்சாப், பிகாரில் உணரப்பட்டது.