தூத்துக்குடி ரயில் நிலையம் 
தமிழ் நாடு

தென்கோடி மழை - உதயநிதி உட்பட 4 அமைச்சர்கள் கூடுதலாக..!

Staff Writer

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு- நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திரு. எஸ். ஞானதிரவியம் ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் விரைவுப்படுத்த கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரையும் முதலமைச்சர் நியமித்துள்ளார்.   

அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.