சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு 
தமிழ் நாடு

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு, புதுமைப்பெண் திட்டங்கள்!

Staff Writer

அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இரண்டு இலட்சத்து 50ஆயிரம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகப்படுத்ததமிழ்ப் புதல்வன் எனும்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 இலட்சம்கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக, 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

வரும் நிதியாண்டில் ஒரு இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதிப்படுத்தும். 

111 கோடி ரூபாய் செலவில் 11 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். 

புதுமைப்பெண் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளும் பயனடையும்வகையில் ரூ.370 கோடியில் விரிவுபடுத்தப்படும்.  

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களாகக் கண்டறியப்படும் 6 மாதத்திற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கப்படும்.