வைகை ஆறு 
தமிழ் நாடு

மதுரையிலும் தொடர் மழை- வைகை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு!

Staff Writer

சென்னை, சுற்று வட்டாரங்களுக்கு முன்னதாகவே மாநிலத்தின் பல பகுதிகளில் பருவ மழை தொடங்கிவிட்டது. சில நாள்களாக கோவை, சேலத்தில் அதிக மழை பெய்தது. 

மதுரை, விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், கன்னியாகுமரி உட்பட பல தென்மாவட்ட ஊர்களிலும் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. 

இந்நிலையில் மதுரை நகர்ப் பகுதியில் இன்று மழையின் விளைவாக வைகை ஆற்றில் அதிக நீர் ஓட்டம் காணப்படுகிறது. 

கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த மழையில் தண்ணீர் தேங்கிய இடங்களை மழை சிறப்பு அதிகாரி அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். 

செல்லூர், டி.எம். நகர் ஆகிய பகுதிகளில் மழை பாதிப்பை அவர்கள் பார்வையிட்டு, ஆய்வுசெய்தனர். 

மழை காரணமாக வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள மட்டத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram