ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு 
தமிழ் நாடு

செப்.5வரை துவரம் பருப்பு கிடைக்கும்!

Staff Writer

நியாயவிலைக் கடைகளில் சிறப்பு வழங்கலாக தரப்பட்டுவந்த துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டன. கொரோனாவையொட்டி மீண்டும் வழங்கப்பட்டபோது துவரம் பருப்பு மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் கடந்த ஆண்டு முதல் சீராக வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. 

இந்தநிலையில், மாதம்தோறும் துவரம் பருப்பு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதியளிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் மாதம் கடைசி நாளான இன்று, உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில்கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக் கொள்ளலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram