நாட்டின் சில மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழையின் காலங்கடந்த தாக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
காலநிலை மாற்றத்தின் போக்கை சட்டென ஊகிக்கமுடியாதபடி தொடரும் நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக வெப்பத்தின் தாக்கம் நிலவிவருகிறது.
இன்று அதிகபட்சமாக மதுரையில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினத்தில் 101.3 டிகிரியும், திருச்சிராப்பள்ளியில் 99.86 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
ஆடி மாதத்தில் வழக்கத்துக்கு மாறான மழைக்கு இடையே, வெயிலின் கொடுமையும் சேர்ந்துகொண்டுள்ளது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாளைக்கு சொந்த ஊர்களுக்குப் பயணம் செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.