நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகியவை வெறுப்பு அரசியல், பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும் அதைக் கண்டிக்கும்வகையில் சென்னையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் நடைப்பயணம் நடத்தின.
சென்னையில் அண்ணா சாலை ஜிம்கானா கிளப் முகப்பிலுள்ள காமராஜர் சிலையிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் சிலை வரை நடைப்பயணம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்திருநாவுக்கரசர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதைப்போல, புறநகர்ப் பகுதியில் மாங்காடு காந்தி சிலை முதல் குன்றத்தூர்வரை நடைப்பயணம் நடைபெற்றது. இதிலும் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.