செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவர் 
தமிழ் நாடு

5 பேர் சாவு- முதலில் இழப்பீடு அறிவித்தது தமிழக காங்கிரஸ்!

Staff Writer

சென்னையில் நடைபெற்ற விமான சாகசத்தைப் பார்க்கவந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இதைத் தெரிவித்தார். 

“ முதற்கட்டமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்துக்கொண்டு, குடும்பத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு நிதியாக வழங்க முடிவுசெய்துள்ளோம். உயிரிழந்தவர்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவை தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். எங்கள் தலைவரிடம் பேசி மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வோம்.” என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram