நடிகர் விஜய் 
தமிழ் நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு- மதுரையில் நடத்த திட்டம்!

Staff Writer

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், அதன் முதல் நிா்வாகிகள் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.