செல்ல பிராணிகள் பூங்கா (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

லொள் லொள் சத்தம் இனி தெருவில் கேட்காது!... வரவுள்ளது முதல் பூங்கா…!

Staff Writer

சென்னை தேனாம்பேட்டையில் செல்ல பிராணிகளுக்கான முதல் பூங்கா வரவுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல், செல்ல பிராணிகளுக்கென பூங்கா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்துவந்தாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இயக்குநர்கள் குழு, பூங்கா அமைப்பதற்கான உடனடி தேவை இல்லை என்று கூறியதால், இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.

சமீப காலமாக, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய் கடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், செல்ல பிராணிகளுக்கென்று தனி இடம் ஒதுக்குவது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. விரைவில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

தேனாம்பேட்டை டிமான்டி காலனியில் உருவாக உள்ள செல்ல பிராணிகளுக்கான பூங்கா, சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. ஒரே நேரத்தில் 30 நாய்கள் வரை பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு உருவாக்கப்படுறது. நாய்கள் நடைப்பயிற்சி செய்யவும் விளையாடுவும் அளவுக்கு தனித்தனி இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

உரிமம் பெற்று செல்ல பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை தேனாம்பேட்டையில் அதிகமாக இருப்பதால், முதலில் அங்கு பூங்க அமைக்க முடிவு செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

செல்ல பிராணிகளுக்கான பூங்கா திட்டத்தை மேலும் விரிவுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram