தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரிக்குப் பதிலாக, சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப் பெருந்தகை அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
செல்வப் பெருந்தகைக்குப் பதிலாக தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவராக ராஜேஷ் குமார் செயல்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநில தலைவர் பதவியில் இருந்து அழகிரி மாற்றப்படுவார் என்றும் அவருக்குப் பதிலாக திருநாவுக்கரசர்,ஈ. வி. கே. எஸ். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசியாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரஸில் சேர்ந்த செல்வப் பெருந்தகை தொடக்கத்தில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்த நியமனத்தின் மூலம் சிதம்பரம் தரதிருப்திப்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்திருக்கக்கூடும் என அரசியல் நோக்குநர்கள் கருதுகின்றனர்.