தமிழ்நாட்டில் நாய்க்கடியால் மக்கள் காயமடைவது, உயிரிழப்புவரை ஆபத்துகளை எதிர்கொள்வது பெருகிவரும் நிலையில், நாய் வளர்ப்பு தொடர்பான அரசுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக வளர்ந்துவரும் நகர்ப்புறங்களில் நாய்க்கடி தொல்லை அதிகரித்துவருகிறது. சென்னையில் குழந்தைகள், முதியோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன.
இந்தப் பிரச்னை குறித்து உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டே அரசுக்கு இதுகுறித்த ஒழுங்குமுறையை வகுக்க உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் நாய் வளர்ப்புக் கொள்கையை உருவாக்கவும் உயர்நீதிமன்றம் கூறியது.
அதன்படி, கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநர் வரைவுக் கொள்கையை உருவாக்கி, அரசுக்கு அனுப்பிவைத்தார். அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு தமிழ்நாடு அரசு நாய் வளர்ப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது.