தமிழக சட்டப்பேரவையின் வருடாந்திரத் தொடக்கக் கூட்டம் வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.இரவி மரபுப்படி உரையை நிகழ்த்துகிறார்.
அதைத் தொடர்ந்து 19ஆம் தேதியன்று திங்கள் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை அவையில் தாக்கல்செய்கிறார்.
கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பிப்ரவரி 21ஆம்தேதி புதனன்று தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.