எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஜனவரி முதல் இவ்வளவு கொலைகளா...?

Staff Writer

தமிழகத்தில் ஜனவரி மாதம் தொடங்கி இப்போது வரை 595 கொலைகள் நடந்திருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

’போதைப் பொருளால் தமிழகம் சீரழிகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி,பாலியல் வன்கொடுமை நடக்கிறது.

கடலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இன்று வரை 595 கொலைகள் நடந்துள்ளன.

நேற்று தருமபுரியில் இஸ்லாமிய இளைஞரைக் கொலை செய்துள்ளனர்.

வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கொண்டு வரப்படுவதாக செய்தித்தாளில் படித்தேன். கஞ்சா போதையால் தமிழகத்தில் பல கொலைகள் நடக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உட்படப் பல அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படுவது தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. போதைப்பொருள் அதிகரித்துவிட்டது. இதை மறைப்பதற்காக நேற்று மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியிருக்கிறது.” என்றார் எடப்பாடி பழனிசாமி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram