தமிழ்நாட்டில் பத்தாவது முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான அட்டவணை வரும் 14ஆம்தேதி வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோவையில் இதை வெளியிடவுள்ளார் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, பள்ளி இறுதித்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் கடைசிவரை நடைபெறும்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் அதையொட்டி கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் முன்கூட்டியே வைக்கப்பட்டன.
குறிப்பாக, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டிய நிலைமை உண்டானது.
அடுத்த ஆண்டு இப்படியொரு சூழல் எதுவும் இல்லாததால் அப்பாடா தப்பித்தோம் என மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் நிம்மதியாக உள்ளனர்.